சஞ்சீவ் குமார் தாக்கூர்
சுபேதார் சஞ்சீவ் குமார் தாக்கூர் Sanjiv Kumar Thakur கீர்த்தி சக்கரா | |
|---|---|
சஞ்சீவ் குமார் தாக்கூர் | |
| பிறப்பு | 5 திசம்பர் 1977 பிலாசுபூர், இமாச்சலப் பிரதேசம் இந்தியா |
| இறப்பு | 5 ஏப்ரல் 2020 (அகவை 42) குப்வாரா, சம்மு காசுமீர், இந்தியா |
| சார்பு | |
| சேவை/ | |
| தரம் | |
| படைப்பிரிவு | பாரா சிறப்புப் படை 4 |
| விருதுகள் | |
சஞ்சீவ் குமார் தாக்கூர் (Sanjiv Kumar Thakur) என்பவர் ஓர் இந்திய இராணுவ அதிகாரியாவார். பொதுவாக சஞ்சீவ் குமார் என்ற பெயரால் அறியப்படுகிறார். அவில்தார் பதவிக்கு மேல் உள்ள மற்றும் லெப்டினண்ட்டு பதவிக்குக் கீழாகவும் உள்ள இளநிலை ஆணைய அதிகாரிகள் குழுவில் இவர் இடம்பெற்றிருந்தார். இந்திய இராணுவத்தின் '4 பாரா' சிறப்புப் படைப்பிரிவில் பணியாற்றினார்.[1][2] இரண்டோரி பெகக்கு நடவடிக்கையின்போது இவர் ஒரு குழுவை வழிநடத்தினார். இந்த நடவடிக்கையின் போது சஞ்சீவ் குமார் வெளிப்படுத்திய தலைமைத்துவத்தைப் பாராட்டி, இந்தியாவின் அமைதிக்காலத்தின் இரண்டாவது உயரிய வீரதீர விருதான 'கீர்த்தி சக்ரா' விருது இவருக்கு மறைவுக்குப் பின் வழங்கப்பட்டது.[3][4][5]
இளமைக் காலம்
[தொகு]சஞ்சீவ் குமார், 1977 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 5 ஆம் தேதி, இமாச்சலப் பிரதேசத்தின் பிலாசுபூர் மாவட்டத்தில் உள்ள தேரா கிராமத்தில், ஒரு ராசபுத்திரக் குடும்பத்தில் பிறந்தார். குமார் தனது பள்ளிப் படிப்பை தர்மசாலாவில் நிறைவு செய்தார்.[6]
இராணுவ வாழ்க்கை
[தொகு]குமார் 1996 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 30 ஆம் தேதியன்று இந்திய இராணுவத்தில் சேர்ந்தார். தனது பணி காலத்தில், பல்வேறு செயல்பாட்டுப் பகுதிகளில் பணியாற்றினார்.[7][8] தேசிய பாதுகாப்புப் படையில் பணி அமர்த்தப்பட்டும் பணியில் இருந்தார்.[9][10]
இரண்டோரி பெகக்கு நடவடிக்கை
[தொகு]2020 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் நடத்திய ஒரு முக்கியமான தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை ஆகும். இது சம்மு-காசுமீரின் குப்வாரா மாவட்டத்தில், கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகே நடைபெற்றது. கோவிட் 19 பெருந்தொற்று காலத்தில் சில தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக் கோட்டிற்குள் நுழைந்தனர்; பனி தரையில் இருந்த கால்தடங்கள் மூலம் இது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டோரி பெகக்கு நடவடிக்கை 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 முதல் ஏப்ரல் மாதம் 5 வரை நடைபெற்றது. பாக்கித்தான் வழியாக இந்திய எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறப்பட்ட ஆயுதமுடைய தீவிரவாதிகளை கண்டுபிடித்து அழிப்பதே இந்நடவடிக்கையின் நோக்கம் ஆகும். இந்த நடவடிக்கையில் இந்திய இராணுவத்தின் சிறப்பு படை பிரிவு 4 பாரா சிறப்புப் படை ஈடுபட்டது.
இந்திய இராணுவத்தின் ஆளில்லா வான்வழி வாகன கண்காணிப்பு அமைப்பு இவர்களைக் கண்டறிந்தது. 8 இயாட்டு படைப்பிரிவும் அவர்களுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டது. ஆனால் பயங்கரவாதிகள் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றனர். ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியன்று, 41 மற்றும் 57 இராசுட்ரிய துப்பாக்கி படையினரும் இந்த நடவடிக்கையில் இணைந்தனர், ஆனால் மீண்டும் துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு அவர்கள் காடுகளில் ஒளிந்து கொண்டனர். சில நாட்களுக்குப் பிறகு, ஆளில்லா விமானத்தின் உளவுத் தகவல் மூலம் இராணுவம் அவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்தது. 'இரண்டோரி பெகக்கு நடவடிக்கை' என்ற பெயரில் ஒரு புதிய நடவடிக்கை தொடங்கப்பட்டது.
அந்தக் குழுவில், தலா ஆறு பாரா கமாண்டோ வீரர்களைக் கொண்ட இரண்டு படைப்பிரிவுகள் இருந்தன. சுபேதார் குமார் அந்தக் குழுவின் படைப்பிரிவுத் தளபதிகளில் ஒருவரானார். அந்த இடம் முழுவதும் பனியால் மூடப்பட்டு, அணுக முடியாததாக இருந்ததால், அவர்கள் எச்.ஏ.எல். துருவ் உலங்கு வானூர்தி மூலம் வானிலிருந்து தரையிறக்கப்பட்டனர். மிகவும் கடுமையான வானிலை நிலவிய சூழலில், அவர்கள் பயங்கரவாதிகளைத் தேடும் பணியைத் தொடங்கினர். சிறிது நேரம் தேடிய பிறகு, பாரா படைவீரர்கள் சத்ரபால் சிங் மற்றும் பால் கிருசுணன் ஆகியோர், செங்குத்தான மலை முகட்டின் விளிம்பில் நின்றிருந்தனர். அந்த விளிம்பு, வெளியே நீட்டிக்கொண்டிருந்த இறுகிய பனிப்பாறையாக அமைந்திருந்தது. அவர்களின் உடல் எடையைத் தாங்க முடியாமல், அந்த விளிம்பு உடைந்துவிடவே, அவர்கள் இருவரும் கீழே இருந்த உறைந்த மலை ஓடைக்குள் விழுந்தனர். துணை அதிகாரி குமார் தனது குழுவினருடன் இணைந்து உடனடியாக அவர்களை மீட்க விரைந்தார். பயங்கரவாதிகள், அவர்கள் கீழே விழுந்த அதே இடத்திலேயே மறைந்திருந்தனர். பயங்கரவாதிகள் இந்த நிகழ்வை உணர்ந்துகொண்டு, குமாரின் குழுவை நோக்கிச் சுடத் தொடங்கினர். கடுமையான சண்டையின்போது, உடலின் பல பாகங்களில் காயமடைந்திருந்த போதிலும், குமாரின் அணியினரால் பயங்கரவாதிகள் அனைவரையும் ஒழிக்க முடிந்தது. 2020 ஏப்ரல் 5 அன்று நடைபெற்ற இந்த நடவடிக்கை வெற்றிகரமாக அமைந்தது. எனினும், குமார் போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தார்.[11] குமாருக்கு, நாட்டின் அமைதிக்காலத்தின் இரண்டாவது உயரிய வீரதீரச் செயலுக்கான விருதான 'கீர்த்தி சக்ரா' விருது மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது. இவரது நான்கு சகாக்களான அவில்தார் தேவேந்திர சிங், பாரா படையின் பால் கிருசுணன், சட்டர்பால் சிங் மற்றும் அமித் குமார் ஆகியோர் போரில் வீரமரணம் அடைந்த நிலையில், தமாங் (சௌரிய சக்ரா) மட்டுமே இவ்வாய்வு நடவடிக்கையிலிருந்து உயிர்பிழைத்த ஒரே நபராவார்.[12][13]
கீர்த்தி சக்கரா விருது
[தொகு]
சுபேதார் சஞ்சீவ் குமாரின் ஈடுஇணையற்ற தியாகங்கள் மற்றும் தலைமைத்துவத்தைப் பாராட்டி, இந்தியக் குடியரசுத் தலைவர் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 அன்று 'கீர்த்தி சக்ரா' விருதை வழங்கினார்; இவ்விருதை அவரது மனைவி பெற்றுக்கொண்டார்.[14][15][16]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sura, Ajay (26 January 2021). "Subedar from Himachal Pradesh gets Kirti Chakra". Times of India. https://timesofindia.indiatimes.com/city/chandigarh/subedar-from-himachal-pradesh-gets-kirti-chakra/articleshow/80457406.cms. பார்த்த நாள்: 13 July 2025.
- ↑ "Gallantry Awards | Ministry of Defence, Government of India". www.gallantryawards.gov.in. Retrieved 2021-10-17.
- ↑ Bhalla, Abhishek (25 January 2021). "War-time honours for Galwan braves, Mahavir Chakra for martyr Col Santosh Babu". India Today. https://www.indiatoday.in/india/story/war-time-honours-for-galwan-braves-mahavir-chakra-for-martyr-col-santosh-babu-1762665-2021-01-25.
- ↑ "Para Commando Sub Sanjiv Kumar Charged At Terrorists Laying Down His Life For The Nation". IndiaTimes (in Indian English). 2021-01-26. Retrieved 2021-10-17.
- ↑ Ajay Sura (26 Jan 2021). "Subedar from Himachal Pradesh gets Kirti Chakra | Chandigarh News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2021-10-17.
- ↑ Bharatvarsh, TV9 (2021-01-28). "बर्फ से ढके नाले में गिर गए थे कमांडो सूबेदार संजीव कुमार, फिर 4 दिन बाद ऐसे किया आतंकियों को ढेर, पढ़ें रोंगटे खड़े करने वाली कहानी". TV9 Bharatvarsh (in hindi). Retrieved 2021-10-17.
{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link) CS1 maint: unrecognized language (link) - ↑ "Kupwara encounter: Mortal remains of slain soldiers Sanjiv Kumar, Bal Krishan brought to their hometowns in HP". pp. DNA India. https://www.dnaindia.com/india/video-kupwara-encounter-mortal-remains-of-slain-soldiers-sanjiv-kumar-bal-krishan-brought-to-their-hometowns-in-hp-2820100/amp.
- ↑ "5 Pak supported terrorist killed, 5 own Special Force troops also lost: Indian Army". ANI. https://www.aninews.in/news/national/general-news/5-pak-supported-terrorist-killed-5-own-special-force-troops-also-lost-indian-army20200406185352/.
- ↑ "Para Commando Sub Sanjiv Kumar Charged At Terrorists Laying Down His Life For The Nation". IndiaTimes (in Indian English). 2021-01-26. Retrieved 2021-10-17.
- ↑ "हिमाचल: शहीद संजीव के परिवार को सुबह चला पता, कोरोना के चलते नहीं जुटने दी भीड़". Amar Ujala (in இந்தி). Retrieved 2021-10-17.
- ↑ "Army Special Forces commandos killed five terrorists after being air-dropped by helicopters". Times of India. https://timesofindia.indiatimes.com/india/army-special-forces-commandos-killed-five-terrorists-after-being-air-dropped-by-helicopters/articleshow/75012252.cms.
- ↑ "Army pays tributes to 5 soldiers in Keran encounter". Early Times. https://www.earlytimes.in/m/newsdet.aspx?q=289147.
- ↑ "Number of soldiers martyred in Keran encounter rises to 5; equal number of terrorists killed". The Statesmen. https://www.thestatesman.com/india/number-of-soldiers-martyred-in-keran-encounter-rises-to-5-equal-number-of-terrorists-killed-1502874499.html/amp.
- ↑ "Kirti Chakra to Subedar Sanjiv Kumar". Twitter (in ஆங்கிலம்). Retrieved 2021-11-24.
- ↑ "Subedar Sanjiv Kumar की ये कहानी सुनकर रोंगटे खड़े हो जाएंगे!". Navbharat Times (in இந்தி). Retrieved 2021-11-24.
- ↑ "President confers Subedar Sanjiv Kumar with 'Kirti Chakra'". DNA India (in ஆங்கிலம்). Retrieved 2021-11-24.