சஞ்சலி முர்மு
சஞ்சலி முர்மு | |
|---|---|
| உறுப்பினர் ஒடிசா சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2024 | |
| தொகுதி | பாங்கிரிபோசி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 10 சூன் 1994 |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| முன்னாள் மாணவர் | உத்க்கல் பல்கலைக்கழகம் (முதுகலை) |
சஞ்சலி முர்மு (Sanjali Murmu)(பிறப்பு 10 சூன் 1994) ஒடிசாவைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் ஒடிசா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். சஞ்சலி முர்மு மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாங்கிரிபோசி சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். 2024ஆம் ஆண்டு ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் இவர் வெற்றி பெற்றார்.[2][3]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]முர்மு பங்க்ரிபோசியினைச் சேர்ந்தவர். இவரின் தந்தை சுகுதா முர்மு ஒரு விவசாயி. இவர் 2017-ஆம் ஆண்டில் புவனேசுவரத்தில் உள்ள வாணி விகாரில் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்நிறுவனம் உத்கல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1]
அரசியல்
[தொகு]முர்மு 2024 ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் பாங்க்ரிபோசி சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்றார்.[4] இவர் பிஜு ஜனதா தளத்தின் ரஞ்சிதா மராண்டியை 34,476 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5][6][7]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Sanjali Murmu(Bharatiya Janata Party(BJP)):Constituency- BANGRIPOSI (ST)(MAYURBHANJ) - Affidavit Information of Candidate". www.myneta.info. Retrieved 2024-06-05.
- ↑ "Assembly Constituency 29 - Bangriposi (Odisha)". Election Commission of India. Retrieved 2024-06-17.
- ↑ "BJP candidates sweep most of Mayurbhanj Assembly constituencies". The New Indian Express (in ஆங்கிலம்). 2024-06-05. Retrieved 2024-06-05.
- ↑ "BJP storms to power in Odisha". The Week (in ஆங்கிலம்). Retrieved 2024-06-05.
- ↑ "Full list of Odisha Assembly elections 2024 winners". The Indian Express (in ஆங்கிலம்). 2024-06-05. Retrieved 2024-06-05.
- ↑ "Bangriposi Election Result 2024 LIVE Updates Highlights: Assembly Winner, Loser, Leading, Trailing, MLA, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-05.
- ↑ "Bangriposi, Odisha Assembly Election Results 2024 Highlights: BJP's Sanjali Murmu defeats BJD's Ranjita Marndi with 34476 votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-05.