சஞ்சய் யாதவ் (நீதிபதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாண்புமிகு தலைமை நீதிபதி
சஞ்சய் யாதவ்
தலைமை நீதிபதி அலகாபாத் உயர் நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
12 ஜூன் 2021
முன்மொழிந்தவர் என். வி. இரமணா
நியமித்தவர் ராம் நாத் கோவிந்த்
பொறுப்பு தலைமை நீதிபதி, அலகாபாத் உயர் நீதிமன்றம்
பதவியில்
14 ஏப்ரல் 2021 – 11 ஜூன் 2021
நியமித்தவர் ராம் நாத் கோவிந்த்
நீதிபதி, அலகாபாத் உயர் நீதிமன்றம்
பதவியில்
8 ஜனவர் 2021 – 13 ஏப்ரல் 2021
முன்மொழிந்தவர் சரத் அரவிந்த் பாப்டே
நியமித்தவர் ராம் நாத் கோவிந்த்
தனிநபர் தகவல்
பிறப்பு 26 ஜூன்1959
ஜபல்பூர்

நீதிபதி சஞ்சய் யாதவ் (Sanjay Yadav) (பிறப்பு: ஜூன் 26, 1959) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். தற்போது, இவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார். பொறுப்பு தலைமை நீதிபதியாக அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் உயர் நீதிமன்றத்திலும் பணியாற்றியுள்ளார் . அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.[1]

தொழில்[தொகு]

6 ஜூன் 1959இல் பிறந்த யாதவ், ஆகஸ்ட் 25, 1986இல் வழக்கறிஞராகச் சேர்ந்தார். இவர் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் குடிமை, வருவாய் மற்றும் அரசியலமைப்பு சட்டப் பயிற்சி பெற்றார். இவர் மத்தியப் பிரதேச துணை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இவர் மார்ச் 2, 2007 அன்று மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், ஜனவரி 15, 2010 அன்று நிரந்தர நீதிபதியாகவும் பணி உயர்த்தப்பட்டார். இவர் பொறுப்பு தலைமை நீதிபதியாக மத்தியப் பிரதேசத்தின் உயர் நீதிமன்றத்திற்கு 6 அக்டோபர் 2019 முதல் 2 நவம்பர் 2019 வரையிலும், 30 செப்டம்பர் 2020 முதல் 2 ஜனவரி 2021 வரையிலும் நியமிக்கப்பட்டார். இவர் 2021 ஜனவரி 8 அன்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். பின்னர் ஏப்ரல் 14 2021 அன்று தலைமை நீதிபதி பொறுப்பினை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஏற்றார். இவர் 2021 ஜூன் 10 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Emmanuel, Meera (5 October 2019). "Justice Sanjay Yadav appointed Acting Chief Justice of Madhya Pradesh High Court [Read Notification"]. Bar & Bench. https://barandbench.com/sanjay-yadav-acting-chief-justice-madhya-pradesh-hc/. 
  2. "Justice Sanjay Yadav appointed Chief Justice of Allahabad High Court" (https://www.thehindu.com/news/national/other-states/justice-sanjay-yadav-appointed-chief-justice-of-allahabad-high-court/article34782918.ece).