உள்ளடக்கத்துக்குச் செல்

சஜீவன் சாஜனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சஜீவன் சஜனா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சஜீவன் சஜனா
பிறப்பு4 சனவரி 1995 (1995-01-04) (அகவை 31)
மானந்தவாடி, வயநாடு மாவட்டம், கேரளம், இந்தியா
மட்டையாட்ட நடைவலதுகை மட்டையாளர்
பந்துவீச்சு நடைவலதுகை எதிர்ச்சுழல் பந்துவீச்சாளர்
பங்குபன்முக வீரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
இ20ப அறிமுகம் (தொப்பி 81)28 ஏப்ரல் 2024 எ. வங்காளதேசம்
கடைசி இ20ப9 மே 2024 எ. வங்காளதேசம்
இ20ப சட்டை எண்44
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2011/12–தற்போதுகேரளம்
2024–தற்போதுமகளிர் மும்பை இந்தியன்ஸ்]]
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெ.ப.இ20 ப.அ.து பெ.இ20
ஆட்டங்கள் 5 78 94
ஓட்டங்கள் 20 1,306 1,194
மட்டையாட்ட சராசரி 10.00 23.32 20.58
100கள்/50கள் 0/0 1/5 0/1
அதியுயர் ஓட்டம் 11 100 60
வீசிய பந்துகள் 12 3,342 1,351
வீழ்த்தல்கள் 0 89 60
பந்துவீச்சு சராசரி 18.16 18.08
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 4/11 4/10
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 34/– 33/–
மூலம்: , 10 June 2024

சஜீவன் சஜனா (Sajeevan Sajana பிறப்பு: 4 சனவரி 1995) இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணிக்காக பன்முக வீரராக விளையாடுகிறார். வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை எதிர்ச்சுழல் பந்துவீச்சாளரும் ஆவார்.[1]

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

சஜனா, கேரளத்தின் மானந்தவாடி, வயநாடு மாவட்டம் பகுதியில் பிறந்தார். இவரது தந்தை சஜீவன், கேரளத்தில் ஆட்டோ ரிக்சா ஓட்டுநராகப் பணியாற்றினார்.[2] இவரது தாய் சாரதா, மானந்தவாடி நகராட்சியில் பணிபுரிந்தார்.[3]

இளம் வயதிலேயே விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டிருந்த சஜனா, முதலில் கேரளத்தின் 23 வயதுக்குட்பட்ட மகளிர் அணிக்காக விளையாடினார். 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற மகளிர் இருபது20 சூப்பர் லீக் போட்டியில் தனது அணிக்குத் தலைமை தாங்கினார்.[2]

இவர் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், ஒரு தமிழ்த் திரைப்படத்தில் துணை நடிகையாகவும் தோன்றியுள்ளார். இளமைக் காலத்தில் வயநாடு மாவட்ட மகளிர் கால்பந்து அணியின் தலைவராக இருந்த இவர், கல்லூரிக் காலத்தில் தடகளப் போட்டிகளிலும் சிறந்து விளங்கினார்.[3]

உள்ளூர்ப் போட்டிகள்

[தொகு]

சஜனா, 9 நவம்பர் 2012 அன்று 2012–13 மூத்தோர் மகளிர் ஒருநாள் தொடரில் ஆந்திரா அணிக்கு எதிராக கேரள அணிக்காக தனது பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.[4]

18 டிசம்பர் 2011 அன்று 2011–12 மூத்தோர் மகளிர் இருபது20 லீக் தொடரில் ஆந்திரா அணிக்கு எதிராக கேரள அணிக்காக தனது பெண்கள் இருபது20 அறிமுகப் போட்டியில் விளையாடினார்.[5]

1 மார்ச் 2017 அன்று 2016–17 மூத்தோர் மகளிர் மண்டலங்களுக்கு இடையேயான மூன்று நாள் போட்டித் தொடரில் மேற்கு மண்டல அணிக்கு எதிராக தெற்கு மண்டல அணிக்காக தனது முதல் தரத் துடுப்பாட்டத்தின் அறிமுகத்தை மேற்கொண்டார்.[6]

2023 டிசம்பரில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில், ₹15 இலட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் இவர் தேர்வு செய்யப்பட்டார்.[7] 2024 பருவத்தில் அதே அணிக்காக விளையாடினார்.[8]

23 பிப்ரவரி 2024 அன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் ஆறு ஓட்டங்கள் அடித்து, மும்பை இந்தியன்சு அணியின் வெற்றிக்கு உதவினார்.[9][10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Profile: Sajeevan Sajana". ESPNcricinfo. Retrieved 10 June 2024.
  2. 1 2 "Who is Sajeevan Sajana | Bio | Stats | Mumbai Indians Player". Female Cricket. Retrieved 10 June 2024.
  3. 1 2 "S Sajana's instant hit a reward for decade of hard toil". ESPNcricinfo. Retrieved 10 June 2024.
  4. "Andhra Women v Kerala Women, Inter State Women's One Day Competition 2012/13". CricketArchive. Retrieved 10 June 2024.
  5. "Andhra Women v Kerala Women, Inter State Women's Twenty20 Competition 2011/12". CricketArchive. Retrieved 10 June 2024.
  6. "South Zone Women v West Zone Women, Inter Zone Women's Three Day Competition 2016/17". CricketArchive. Retrieved 10 June 2024.
  7. "WPL 2024: Meet Sajana Sajeevan; From paddy field cricket to overnight star". Business Standard. Retrieved 10 June 2024.
  8. "WPL auction: Mumbai Indians buy Kerala all-rounder Sajana". Onmanorama. Retrieved 10 June 2024.
  9. "Debutant Sajana takes Mumbai home with nerveless last-ball six". ESPNcricinfo. Retrieved 10 June 2024.
  10. "The Sajana Sajeevan story: WPL trials, sharing dressing room with idol Harmanpreet and that last-ball six". Sportstar. Retrieved 10 June 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஜீவன்_சாஜனா&oldid=4564664" இலிருந்து மீள்விக்கப்பட்டது