சஜித் பதிரனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சஜித் பதிரனா
பிறப்பு21 மார்ச் 1989 (age 30)
கண்டி

சஜித் ஷானகா பதிரானா (Sachith Shanaka Pathirana) (பிறப்பு: மார்ச் 21, 1989) சஜித் பதிரானா என பரவலாக அறியப்படும் இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இலங்கை துடுப்பாட்ட அணிக்காக தேர்வு துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று துடுப்பாட்ட வடிவங்களிலும் விளையாடி வருகிறார்.[1] மேலும் முதல் தரத் துடுப்பாட்டம், பட்டியல் அ மற்றும் இருபது 20 ஆகிய உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். அவர் கண்டியின் டிரினிட்டி கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். இவர் 2008 ஆம் ஆண்டில் தனது பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் 2008 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமானார். 2015 ஆம் ஆண்டில் இவர் சர்வதேச அளவில் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சார்பாக விளையாடினார். இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 9785ஓட்டங்களையும் , பட்டியல் அ போட்டிகளில் 3,462 ஓட்டங்களையும் எடுத்தார். மேலும் இவர் 19 வயதிற்கு உட்பட்ட இலங்கை அணி , இலங்கை அ அணி சார்பாகவும் இவர் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டார். அவர் கண்டியின் டிரினிட்டி கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.

ஆரம்பகால மற்றும் உள்ளூர் போட்டிகள்[தொகு]

19 வயதிற்கு உட்பட்டோருக்கான இலங்கைத் துடுப்பாட்ட அணியில் இவர் விளையாடினார்.அந்தத் தொடரில் 23 போட்டிகளில் விளையாடி மொத்தம் 63 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் முதலிடம் பெற்றார்.[2]

மார்ச் 2018 இல், அவர் 2017–18 சூப்பர் ஃபோர் மாகாணத் துடுப்பாட்ட போட்டித் தொடரில் இவர் கண்டி துடுப்பாட்ட அணியில் இடம் பெற்றார் . [3] [4] அடுத்த மாதம் நடைபெற்ற 2018 சூப்பர் மாகாண ஒருநாள் போட்டித் தொடரிலும் இவர் கண்டி துடுப்பாட்ட அணியிலும் அவர் இடம் பெற்றார் . [5]

ஆகஸ்ட் 2018 இல், கண்டி துடுப்பாட்ட அணியில் 2018 எஸ்.எல்.சி டி 20 லீக்கில் அவர் இடம் பெற்றார். [6] 2018–19 பிரீமியர் லீக் போட்டியில் பதுரெலியா ஸ்போர்ட்ஸ் சங்கம் சார்பாக இவர் விளையாடினார். அந்தத் தொடரில் ஒன்பது போட்டிகளில் விளையாடி 23 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் முதலிடம் பெற்றார். [7]

சர்வதேச போட்டிகள்[தொகு]

15 ஜூலை 2015 அன்று பாகிஸ்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இலங்கைக்காக தனது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். தனது முதல் போட்டியில் 10 ஓவர்களை வீசி 54 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்குகளை வீழ்த்தினார். தினேஷ் சந்திமலுடன் சேர்ந்து மட்டையாட்டத்தில் 50 ஓட்டங்களை எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். இந்தப் போட்டியில் இவர் மட்டும் 33 ஓட்டங்களை எடுத்தார்.[8]

6 செப்டம்பர் 2016 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கைக்காக தனது இருபது -20 சர்வதேச (டி 20 ஐ) அறிமுகமானார். [9]

பதிரானா பிப்ரவரி 2017 அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக செஞ்சுரியனில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இருப்பினும், அந்தப் போட்டியில் இலங்கைத் துடுப்பாட்ட அணி 88 ஓட்டங்களில் தோல்வியடைந்தது, மேலும் அந்தத் தொடரினை 5–0 என்று இலங்கை இழந்தது. [10]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சஜித்_பதிரனா&oldid=2870286" இருந்து மீள்விக்கப்பட்டது