உள்ளடக்கத்துக்குச் செல்

சஜனிகாந்த தாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சஜனிகாந்த தாசு (Sajanikanta Das)(25 ஆகத்து 1900 - 11 பிப்ரவரி 1962) என்பவர் வங்க மொழிக் கவிஞர், இலக்கிய விமர்சகர் மற்றும் ஷானிபரர் சித்தியின் ஆசிரியர் ஆவார்.[1][2]

இளமை

[தொகு]

சஜனிகாந்தா பர்தமான் மாவட்டத்தில் உள்ள பெடல்பன் கிராமத்தில் பிறந்தார். தினாஜ்பூரின் தினாஜ்பூர் ஜிலா பள்ளியில் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று 1918-ல் கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். அரசியல் காரணங்களால் தாசு இங்குத் தனது படிப்பை முடிக்காமல், பாங்குரா வெசுலியன் சேவைக் கல்லூரியில் சேர்ந்தார். இதன்பிறகு ஸ்காட்டிஷ் தேவாலயக் கல்லூரியில் இளமறிவியலில் தேர்ச்சி பெற்றார்.[3]

இலக்கிய வாழ்க்கை

[தொகு]

தாசு முது அறிவியல் படிக்கும் போது மதிப்பிற்குரிய பெங்காலி இதழான ஷானிபரர் சித்தியில் சேர்ந்து பாப்குமார் பிரதான் என்ற புனைபெயரில் எழுதினார். இதன் 11வது இதழிலிருந்து பத்திரிகையின் தலைமை ஆசிரியரானார். இவர், நையாண்டி அடிப்படையிலான விமர்சனங்களுக்காகப் பிரபலமானார். இவரது உரைநடை, நையாண்டி தாக்குதல் வங்காளத்தின் பிரபலங்களைப் பாதித்தது. இவர் பிரபாசி, டைனிக் பாசுமதி மற்றும் பங்கஸ்ரீ இதழ்களிலும் இணைந்து பணியாற்றினார். தாசு பண்டைய பெங்காலி இலக்கியம், வங்காளத்தின் சமூக-அரசியல் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து கட்டுரைகளை வெளியிட்டார். இவர் ஒரு ஆக்கப்பூர்வமான விமர்சகர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நாடக எழுத்தாளர் என அவரது காலத்தில் நன்கு அறியப்பட்ட அறிவுஜீவியாக இருந்தார். தாசு தொடர்ந்து பத்து ஆண்டுகள் பாங்கிய சாகித்ய பரிசத்தின் தலைவராக இருந்தார். கொல்கத்தாவில் ஷானிரஞ்சன் அச்சகம் மற்றும் ரஞ்சன் வெளியீட்டு இல்லம் ஆகியவற்றை நிறுவினார்.[3][4]

வெளியீடுகள்

[தொகு]

சஜனிகாந்த தாசு வெளியிட்டப் புத்தகங்கள்:

  • மோனோதர்பன்
  • பாதை சால்டே காசர் ஃபுல்
  • அஜாய்
  • பாப் ஓ சந்தோ
  • பங்களா சாஹித்யர் இதிஹாஸ்
  • பாங்கோ ரங்கபூம்
  • பாஞ்சிஸ் பைஷாக்
  • மது ஓ ஃபுல்
  • அங்குஷ்தோ
  • வில்லியம் கேரி
  • ரவீந்திரநாத் : ஜிபோன் ஓ சாஹித்யா

மேற்கோள்கள்

[தொகு]
  1. Digital Library of India Item. "Shanibarer Chithi". archive.org. Retrieved 16 November 2017.
  2. "SHANIBARER CHITHI". caluniv.ac.in. Retrieved 16 November 2017.
  3. 3.0 3.1 Subodh C. Sengupta & Anjali Basu, Vol - I (2002). Sansad Bangali Charitavidhan (Bengali). Kolkata: Sahitya Sansad. p. 542. ISBN 81-85626-65-0.
  4. Amaresh Datta, Sahitya Akademi (1987). Encyclopaedia of Indian Literature. ISBN 9788126018031. Retrieved 16 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஜனிகாந்த_தாசு&oldid=3668214" இலிருந்து மீள்விக்கப்பட்டது