உள்ளடக்கத்துக்குச் செல்

சச்சின் சென்குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சச்சின் சென்குப்தா
பிறப்பு20 சூலை 1891
சென்கதி, குல்னா மாவட்டம், இந்தியா (தற்பொழுது வங்காளதேசம்)
இறப்பு5 மார்ச் 1961 (வயது 69)
சியாம்பஜார், கொல்கத்தா, மேற்கு வங்காளம், India
பணிகதையாசிரியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்சிராஜுதுல்லா

சச்சின் சென்குப்தா (Sachin Sengupta) என்றும் அழைக்கப்படும் சசீந்திரநாத் சென்குப்தா (1891–1961), ஒரு முக்கிய வங்காள நாடக ஆசிரியரும் இந்தியாவின் கொல்கத்தா நாடகங்களின் தயாரிப்பாளரும் இயக்குநரும் ஆவார்.

படைப்புகள்

[தொகு]

கவிஞர்களான இரவீந்திரநாத் தாகூர், காசி நஸ்ருல் இஸ்லாம் ஆகியோரின் படைப்புகளை நாடகமாக்குவதும் இவரது படைப்புகளில் அடங்கும். இவரது புகழ்பெற்ற நாடகங்களில் சில-ரக்தகமல், ராசுடிரபிரோகி, தேசர் தாபி ஆகியவை அடங்கும். சிராஜ்துல்லா இவரது மிகவும் பிரபலமான படைப்பாகும். இது வங்காளம் முழுவதும் நாடகம் மற்றும் ஜாத்ரா என அரங்கேற்றப்பட்டது. மேலும் சமகால வங்காள சமூகத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது. அரசு சாரா குழுவின் ஒரு பகுதியாக இவர் உருசியா, சீனா, இலங்கை போன்ற நாடுகளுக்கு பயணம் செய்திருந்தார்.

இறப்பு

[தொகு]

சென்குப்தா, 5 மார்ச்1961 அன்று (பூபென் போசு பகுதி, கொல்கத்தா) இறந்தார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sengupta, Sachindra Nath". Banglapedia (in ஆங்கிலம்). Retrieved 15 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சச்சின்_சென்குப்தா&oldid=4472437" இலிருந்து மீள்விக்கப்பட்டது