சச்சப்போயா மக்கள்


சச்சப்போயா மக்கள் அல்லது முகில் மக்கள் என்பவர்கள் அந்தீசு மலைத்தொடர்களில், இன்றைய பெருவில் வாழ்ந்த மக்கள் ஆவார்.[1] இன்கா இவர்களை அடக்கி ஆளும் முன் வளர்ச்சி அடைந்த நாகரிகத்தை இந்த மக்கள் கொண்டு இருந்தார்கள். இன்காவின் ஆட்சியை சச்சப்போயா தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளார்கள். எசுபானியர்கள் தென் அமெரிக்காவை ஆக்கிரமித்து, இன்கா பேரரசை வீழ்த்திய பின்னர் இந்த மக்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் தெளிவாகக் கிடைக்கப்பெறவில்லை.
சச்சப்போயா மக்கள் பற்றிய தகவல்கள் தொல்பொருளியல் ஆய்வுகள் ஊடாகவும், எசுபானியர்கள் மூலங்கள் ஊடாகவும் கிடைக்கின்றன.
இந்த மக்களின் சமூக அமைப்பு சமத்துவம் மிக்கதாகவும் (egalitarian), இளகிய கூட்டாட்சியாகவும் (confederation) [2] இருந்தாக தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்<. இது அக்காலத்தில் நிலவிய பெரும்பாலான சமூக அரசியல் அமைப்புகளில் இருந்து மாறுபட்டது ஆகும்.