சசெக்சைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சசெக்சைட்டு
Sussexite
Sussexite.jpg
சசெக்சைட்டு நியூ செர்சி சுரங்க மாவட்டத்தில் கிடைத்தது.
பொதுவானாவை
வகைநேசோபோரேட்டுகள்
வேதி வாய்பாடுMnBO2(OH)

சசெக்சைட்டு (Sussexite) என்பது MnBO2(OH) என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய மாங்கனீசு போரேட்டு கனிமமாகும். இப்படிகங்கள் ஒற்றை சரிவச்சு முப்பட்டக வடிவமைப்பும் இழைத்தன்மையுடனும் காணப்படுகின்றன. முத்தைப்போல் பளபளப்பாக வெள்ளை, மஞ்சள் கலந்த வெள்ளை, இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படுகிறது. தனிமங்களின் கடினத்தன்மையை அளக்க உதவும் மோவின் அளவுகோல் அடிப்படையில் இதனுடைய கடினத்தன்மை 3 ஆகவும் நீர் ஒப்படர்த்தி 3.2 ஆகவும் காணப்படுகிறது.[1]

1868 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நியூ செர்சியில் முதலில் இது கண்டுபிடிக்கப்பட்டது. பிராங்க்ளின் சுரங்க மாவட்டத்தில் உள்ள சசெக்சு மாவட்டத்தின் பெயர் இக்கனிமத்திற்கு சூட்டப்பட்டது.

சசெக்சைட்டு பிரான்சு, இத்தாலி, நமீபியா, வட கொரியா, தென்னாப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, மற்றும் மிச்சிகன், நியூ ஜெர்சி, யூட்டா, வர்ஜீனியா போன்ற அமெரிக்க மாநிலங்களிலும் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
"https://ta.wikipedia.org/w/index.php?title=சசெக்சைட்டு&oldid=1861231" இருந்து மீள்விக்கப்பட்டது