உள்ளடக்கத்துக்குச் செல்

சசுவத் ஜோசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சசுவத் ஜோசி
பின்னணித் தகவல்கள்
பிறப்புதிசம்பர் 18, 1984 (1984-12-18) (அகவை 41)
திட்லாகர்
பிறப்பிடம்இந்தியா
இசை வடிவங்கள்ஒடிசி
தொழில்(கள்)இந்தியச் செவ்வியல் நடனம், கலைஞர், நடன அமைப்பாளர், மாதிரி (நபர்), நடன ஆசிரியர்
இசைத்துறையில்2000–தற்போது வரை
இணையதளம்http://www.saswatjoshi.in

சசுவத் ஜோசி (Saswat Joshi) (பிறப்பு: 1984 ஆம் ஆண்டு திசம்பர் 18) இந்தியச் செவ்வியல் நடனக் கலைஞர், நடன அமைப்பாளர், மாதிரி ஆவார். இவர் ஒடிசி நடனப் பாணியைப் பயன்படுத்தி நிகழ்த்தும் கலைக்காக அறியப்படுகிறார்.[1]

ஆரம்ப வாழ்க்கையும் பின்னணியும்

[தொகு]

சசுவத் ஜோசி 1984 ஆம் ஆண்டு திசம்பர் 18 அன்று தித்லாகர் பகுதியில் பிறந்தார். [2] ஐந்து வயதில் தனது சொந்த ஊரான தித்லாகர், போலங்கிர் பகுதியில், குருமார்களான பிரசாந்த பத்நாயக், சாந்தனு பெகேரா ஆகியோரின் வழிகாட்டுதலில் நடனப் பயிற்சியைத் தொடங்கினார்.[3]

பணியியல் வாழ்க்கை

[தொகு]

2000 ஆம் ஆண்டு, பத்மசிறீ விருது பெற்ற குரு கும்கும் மொகந்தியின் வழிகாட்டுதலில் சசுவத் ஜோசி தொழில்முறை ஒடிசி நடனப் பயிற்சியைத் தொடங்கினார். பத்ம விபூசண் விருது பெற்ற குரு கேளுச்சரண மகோபாத்திராராவின் ஒடிசி நடனப் பாணியைப் பின்பற்றும் கலைஞரான இவர், குரு இலியானா சித்தாரிஸ்தியின் வழிகாட்டுதலிலும் பயிற்சி பெற்றார். இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் தேசியக் கல்வி உதவித்தொகையைப் பெற்று, சண்டிகர் பல்கலைக்கழகத்தில் விசாரத் பட்டயத்தைப் பயின்றார். மேலும், ரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் வழங்கிய 'சங்கீத ரத்னா' விருதையும் பெற்றார். 2012 ஆம் ஆண்டு பிரான்சின் பாரிசு நகரில் உள்ள கிமே அருங்காட்சியகத்தில் நிகழ்ச்சி நடத்தினார். மேலும், பல பல்கலைக்கழகங்களில் ஒடிசி நடனம் குறித்த செய்முறை விளக்க உரைகளையும் வழங்கினார். இந்தியச் செவ்வியல் நடனமான ஒடிசியைப் பரப்பும் நோக்கில், இத்தாலி, பிரான்சு, அங்கேரி, பின்லாந்து, யப்பான், தென் கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் பயணம் செய்து நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், இத்தாலியின் சிசிலி தீவிலுள்ள பலெர்மோ நகரில் நடைபெற்ற ஐ ஹேவ் எ டிரீம் என்ற நிகழ்ச்சியில் கார்லா பிராச்சி, லுசியானா சவின்யானோ, ஜூசெப்பே பிக்கோனே, பெப்பே மெனகட்டி, ரோசெல்லா பிரெசியா, லுசியானோ மட்டியா கன்னிட்டோ ஆகியோருடன் ஒரே மேடையில் நடனமாடினார். [4][5] சசுவத் ஜோசி லாசியகலா நிகழ்கலை நிறுவனம் என்ற அமைப்பின் நிறுவனரும் ஆவார். இந்த நிறுவனம் ஆண்டுதோறும் ஏகலவ்யா நடன விழாவை நடத்தி வருகிறது.

திரைப்படங்கள்

[தொகு]
  • நிலா மாதவ பாண்டா இயக்கிய கௌன் கிட்னே பானி மேன்
  • இமான்சு கட்டுவா இயக்கிய கிராந்தி தாரா
  • பல இந்தித் திரைப்படங்களுக்கு நடன அமைப்பு ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Art Vision - Workshops". Artvisionindia.com. Retrieved 11 August 2017.
  3. "Saswat Joshi". Odisha360.com. Retrieved 11 August 2017.
  4. Connection, Sumathi, Saigan. "Review - I have a dream". Narthaki.com. Retrieved 11 August 2017.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  5. "Opere e balletti 2008". Archived from the original on 2012-05-26. Retrieved 2014-12-11.
  6. "Odisha Diary-Fuelling Odisha's Future-Latest Odisha news, Top Breaking headlines, Odisha breaking news, Odisha Headlines, Odisha latest online news". OdishaDiary. Retrieved 11 August 2017.

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சசுவத்_ஜோசி&oldid=4615490" இலிருந்து மீள்விக்கப்பட்டது