சசி வத்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சசி வத்வா
பிறப்பு30 சூலை 1948
தேசியம் இந்தியா
பணியிடங்கள்அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்
கல்வி கற்ற இடங்கள்நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக் கல்லூரி, ஜபல்பூர்
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்
ஆய்வு நெறியாளர்வீணா பிஜ்லானி
முனைவர் பட்ட 
மாணவர்கள்
உடற்கூறியலும் நரம்பியல் மேம்பாடும்

சசி வத்வா (Shashi Wadhwa) (பிறப்பு: சூலை 20, 1948) புது தில்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் தலைவராவார். வளர்ச்சி நரம்பியல், அளவு உருவவியல் மற்றும் எலக்ட்ரான் நுண்ணோக்கி ஆகியவை இவரது முக்கிய ஆராய்ச்சி ஆர்வங்களாகும். இவரது ஆய்வகம் முக்கியமாக வளரும் மனித மூளையில் கவனம் செலுத்தியது. [1][2][3][4][5]

கல்வி[தொகு]

சசி 1970இல் மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர், முதுகலை படிப்புகளுக்காக அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் உடற்கூறியல் துறையில் சேர்ந்தார். [1]

இவர், பேராசிரியராக ஓய்வு பெறும் வரை பணியாற்றினார். இறுதியில் உடற்கூறியல் துறையின் தலைவரானார். 1972ஆம் ஆண்டு முதல் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு கற்பித்தும் பயிற்சியும் அளித்துள்ளார். இவர் 67 சர்வதேச மற்றும் 37 தேசிய ஆராய்ச்சி வெளியீடுகள், 27 புத்தகங்கள் எழுதியும், 13 புத்தகங்களை திருத்தியும் வெளியிட்டுள்ளார். [2]

அங்கீகாரம்[தொகு]

தேசிய மருத்துவ அறிவியல் கழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சகாவான சசி, [6] தனது பணிக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். 1990ஆம் ஆண்டில் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் சாந்தி ஸ்வரூப் பட்நகர் விருதையும் [1] 2013இல் பி.கே.பச்சாவத் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் வென்றார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "AIIMS Profile - Shashi Wadhwa". பார்த்த நாள் 16 March 2014.
  2. 2.0 2.1 2.2 "Neuro Science Academy Profile - Shashi Wadhwa". மூல முகவரியிலிருந்து 16 March 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 March 2014.
  3. "Answers lead to more questions". மூல முகவரியிலிருந்து 16 March 2014 அன்று பரணிடப்பட்டது.
  4. "Fellowship - Search Result". ias.ac.in. பார்த்த நாள் 2014-03-16.
  5. "City briefs : Shashi Wadhwa is new dean of AIIMS - Indian Express". Archive.indianexpress.com (2012-05-05). பார்த்த நாள் 2014-03-16.
  6. "List of Fellows - NAMS". National Academy of Medical Sciences (2016). பார்த்த நாள் 19 March 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சசி_வத்வா&oldid=3133263" இருந்து மீள்விக்கப்பட்டது