சசி பூசண் சகாய்
சசி பூசண் சகாய் (Shashi Bhushan Sahai) என்பவர் ஒரு இந்திய எழுத்தாளரும், பீகார் மாநிலத்தின் காவல்துறை தலைமை இயக்குநராக (DGP) பணியாற்றியவரும் ஆவார். இவர் 1952 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்தியக் காவல் பணி அதிகாரி ஆவார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]சசி பூசண் சகாய் பீகாரின் அன்றைய சாகாபாத் மாவட்டத்தின் (தற்போது போஜ்பூர் மாவட்டம்) தலைமையகமான ஆாராவில் பிறந்தார். சகாய் தனது தொழில் வாழ்க்கையை 1950ஆம் ஆண்டில் ஒரு கல்லூரிப் பொருளாதார விரிவுரையாளராகத் தொடங்கினார். பின்னர், 1952இல் இந்தியக் காவல் பணியில் சேர்ந்து, காவல்துறையின் தலைமை இயக்குநர் நிலைக்கு உயர்ந்தார்.[1] இவர் தனது 90 ஆவது வயதில், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் பணியாற்றும் தனது மகன்களில் ஒருவருடன் வசித்து வந்த ஐதராபாத்தில் காலமானார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவருடைய இளைய மகன் கொல்கத்தாவில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படைப் பிரிவின் காவல்துறைத் தலைவராக பணியாற்றி 2026 மே 30 அன்று ஓய்வு பெற்றார்.
நூல் விவரக்குறிப்பு
[தொகு]சகாய் எழுதிய நூல்களில் பின்வருவன அடங்கும்:
- பாலிடிக்ஸ் ஆஃப் கரப்ஷன்: தி காடஸ் தட் ஃபெயில்டு (Politics of Corruption: The Goddess that Failed - 1995)
- இந்தியா: ட்விலைட் அட் மிட் டே (India: Twilight At Midday - 1997)
- சவுத் ஆசியா: ஃபிரம் ஃப்ரீடம் டு டெரரிசம் (South Asia: From Freedom to terrorism - 1998)
- தி ஏலியன் ஆஃப் ஃபேக்லாண்ட் (The Alien Of Fakeland - 2001 இல் லண்டனில் வெளியிடப்பட்ட ஒரு புனைகதை நூல்)
- ஜிகாதி டெரரிசம்: மேக்கிங் ஆஃப் ஏ வேர்ல்டு வார்? (Jihadi Terrorism: Making of a World War? - 2006)
- தி இந்து சிவிலைசேஷன்: ஏ மிராக்கிள் ஆஃப் ஹிஸ்டரி (The Hindu Civilization: A Miracle of History - 2010)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Weisman, Steven R. (27 April 1987). "INDIA'S CORNER OF MYSTERY: BIHAR'S POOR AND LAWLESS". The New York Times: p. 1. https://www.nytimes.com/1987/04/27/world/india-s-corner-of-mystery-bihar-s-poor-and-lawless.html?pagewanted=all. பார்த்த நாள்: 12 January 2011.