உள்ளடக்கத்துக்குச் செல்

சசிகுமார் சுப்பிரமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சசிகுமார் சுப்பிரமணி
பிறப்பு7 செப்டம்பர் 1984
தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்சசிகுமார்
பணிநடிகர்

சசி என்று அழைக்கப்படும் சசிகுமார் சுப்ரமணி (Sashikumar Subramani) என்பவர் ஒரு இந்திய நடிகராவார். இவர் குறிப்பாக தமிழ்த் திரைப்படங்கள், நாடகங்கள், தொலைக்காட்சத் தொடர்கள் போன்றவற்றில் பணியாற்றியுள்ளார்.[1] மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் (2002), பாலு மகேந்திராவின் தலைமுறைகள் (2013) ஆகிய படங்களில் நடித்து தனது நடிப்பின் மூலம் நடிகராக திருப்புமுனையைப் பெற்றார்.

துவக்ககால வாழ்க்கையும், தொழிலும்

[தொகு]

சசிகுமார் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் கேரளத்தைச் சேர்ந்த தமிழ் ஐயர் தந்தைக்கும், நம்பூதிரி தாய்க்கும் மகனாகப் பிறந்தார். சிறு வயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் கொண்ட இவர், முதலில் ஒரு கிறித்தவ சமய நாடகத்தில் ஜோசப்பாக நடித்தார். இவர் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றார். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு இவர் நடிகராகும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்காக பாலு மகேந்திரா உள்ளிட்ட இயக்குநர்களின் வீடுகளுக்குச் சென்று வாய்ப்புகளைத் தேடினார். ஆனால் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நடிக்க வாய்ப்பு கிடைக்காததால், 1996 ஆம் ஆண்டு ஜேஜே தொலைக்காட்சி தன் தயாரிப்பை நிறுத்தும் வரை, ஒரு ஆண்டு அந்தத் தொலைக்காட்சியில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் சசிகுமார் ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், இயக்குநர் ராஜா பாண்டி ஆகியோருடன் பழகினார். அவர்கள் வழியாக தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் சிறிய வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். 1999 ஆம் ஆண்டில், சசிகுமாரை பாலு மகேந்திரா கண்டார். அவர் தங்களின் முந்தைய சந்திப்பை மறந்துவிட்டு, கதை நேரம் என்ற தொடருக்கான ஒரு பாகத்தில் இவரை நடிக்க வைக்க விரும்பினார். சசி படப்பிடிப்பிற்கு வந்தபோது, பாலுமகேந்திரா இவரை அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமற்றவர் என்று கருதி அவரை படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறச் சொன்னார். சசிகுமார் தனது தோற்றத்தை மேம்படுத்திக்கொண்டு, மீண்டும் நடித்து, பாலுமகேந்திராவிடம் தனக்கு அந்த வேடத்தை வழங்குமாறு கெஞ்சினார், அதற்கு இயக்குநர் ஒப்புக்கொண்டார். சசிகுமாரின் நடிப்பால் ஈர்க்கப்பட்ட பாலுமகேந்திரா, கதை நேரம் தொடரின் இந்தி பதிப்பு உட்பட, பாலுமகேந்திராவுடன் முப்பதுக்கு மேற்பட்ட முறை பணியாற்றினார். ராதிகாவின் சித்தி உள்ளிட்ட தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் தொடர்ந்து பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில் பல திரைப்படப் படைப்பாளிகளுடன் பழகினார்.

2000 ஆம் ஆண்டில் பாலுமகேந்திராவுடன் ஒரு திரைப்படத்தின் முன் தயாரிப்புப் பணியில் சசிகுமார் பணியாற்றினார். ஆனால் அந்தப் படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்காததால், சசிகுமார் தமிழ்ப் படங்களில் துணை நடிகராக நடிக்கத் தொடங்கினார். முதலில் இவர் என். லிங்குசாமியின் ஆனந்தம் (2001) படத்தில் ரம்பாவின் சகோதரராகத் தோன்றினார், பின்னர் ஷாஜகான் (2001) படத்தில் மனநலம் குன்றிய இளைஞனாக நடித்தார். பாலு மகேந்திரா விஜய் ஆதிராஜின் திருமணத்தில் ஒரு தற்செயலான சந்திப்பின் போது சசிகுமாரை இயக்குநர் மணிரத்னத்திடம் பரிந்துரைத்தார். அதன் பின்னர் மணிரத்தினம் இவரை கன்னத்தில் முத்தமிட்டால் (2002) என்ற போர் நாடகத் திரைப்படத்தில் விடுதலைப் புலி போராளியாக நடிக்கத் தேர்ந்தெடுத்தார். பாலுமகேந்திராவின் ஜூலி கணபதி (2003), நள தமயந்தி (2003) மற்றும் தலைநகரம் (2006) மற்றும் எஸ். ஜே. சூர்யா நடித்த நியூட்டனின் மூன்றாவது விதி (2009) உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் தொடர்ந்து நடித்தார்.

சசிகுமார், இந்திய யோகி இராமகிருஷ்ணர் பாத்திரத்தில் ஸ்ரீராம கிருஷ்ண தரிசனம் (2012) என்ற படத்தில் முதன்மை வேடத்தில் நடித்தார். 2013 ஆம் ஆண்டில், பாலு மகேந்திராவின் இறுதிப் படமான தலைமுறைகள் படத்தில், பிரிந்த மகன் கதாபாத்திரத்தில் நடித்தார். இயக்குனர் சசிகுமார் தயாரித்த இந்தப் படம், 2013 திசம்பரில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் போதிய விளம்பரம் இன்மையால் வணிகரீதியாக வெற்றிபெறவில்லை. தி இந்து இந்த படத்தை "நல்ல திரைப்படம்" என்று கூறியது. மேலும் சசிகுமாரின் "பாராட்டத்தக்க தோல்விப் படம் அவரது சொத்து" என்றும் "துரதிர்ஷ்டவசமாக, திரைப்படம் இவரை போதுமான அளவு பயன்படுத்திக்கொள்ளவில்லை" என்றும் குறிப்பிட்டது.[2]

திரைப்படவியல்

[தொகு]
ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
2001 ஆனந்தம் ரேணுகாவின் சகோதரர்
ஷாஜகான் கிரி
2002 கன்னத்தில் முத்தமிட்டால் தற்கொலை குண்டுதாரி
ஸ்ரீ
2003 ஜூலி கணபதி இவான்
நள தமயந்தி கிச்சா
ஜே ஜே குணா
2005 திருப்பாச்சி ரவியின் தம்பி.
ஒரு கல்லூரியின் கதை சந்துரு
2006 தம்பி
தலை நகரம் சசி
2007 லீ சசி
சிருங்காரம்
2008 தோழா
தனம்
அறை எண் 305ல் கடவுள்
2009 படிக்கதவன் காசியின் சகோதரர்.
நியூட்டனின் மூன்றாவது விதி ரகு
2012 ஸ்ரீராம கிருஷ்ண தரிசனம் இராமகிருஷ்ணர்
2013 மௌன மழை சசி
தலைமுறைகள் சிவராமன்
2014 மேகா மணி
2017 யாழ் சசி
2020 காக்கைச் சிறகினிலே

மேற்கோள்கள்

[தொகு]
  1. "பாடி லாங்குவேஜால் பட வாய்ப்பை இழந்தேன்!". Kalki. 25 November 2007. p. 77. Retrieved 31 May 2024.
  2. Rangarajan, Malathi (21 December 2013). "Thalaimuraigal: For generations to come". The Hindu – via www.thehindu.com.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சசிகுமார்_சுப்பிரமணி&oldid=4383567" இலிருந்து மீள்விக்கப்பட்டது