சசிகலா மானந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சசிகலா மானந்தர் (ShashikalaManandhar) நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு நாவலாசிரியர் ஆவார். நேபாள பாசா மொழியில் எழுதும் முதல் பெண் நாவலாசிரியர் என்ற சிறப்புக்கும் உரியவரான இவர் நேபாளியிலும் எழுதுகிறார்.[1]

சசிகலா மானந்தர் நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் 1960 ஆம் ஆண்டில் பிறந்தார்.[2] அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[1] 1985 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சைலி என்ற நாவல் இவருடைய முதல் நாவலாகும். இதற்கு முன்னதாக 1982 ஆம் ஆண்டில் நமியை என்ற சிறுகதைத் தொகுப்பையும் பிற சில இலக்கிய வெளியீடுகளையும் வெளியிட்டிருந்தார்.[2] 2003 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் தேதியன்று கங்கி-பசுந்தரா அகாடமி வழங்கும் கங்கி-பசுந்தரா விருதைப் பெற்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "GankiBasundhara Award given away". The Kathmandu Post (nepalnews.com). 2003-01-16 இம் மூலத்தில் இருந்து August 3, 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040803150752/http://www.nepalnews.com.np/contents/englishdaily/ktmpost/2003/jan/jan16/local1.htm. பார்த்த நாள்: 2008-08-28. 
  2. 2.0 2.1 "Writer's Profiles". Layalama.com. Archived from the original on October 28, 2007. பார்க்கப்பட்ட நாள் 2008-08-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சசிகலா_மானந்தர்&oldid=3407945" இலிருந்து மீள்விக்கப்பட்டது