சங்குராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சங்குராம் தமிழகக் கவிஞர். மதுரையில் பிறந்தவர். இவர் விப்ரபந்து கு. வெ. பத்மநாபய்யரின் சீடர். தமிழின் இலக்கிய இலக்கண நயத்தைச் சௌராஷ்டிர மொழியிலும் கொண்டுவரமுடியும் என்று எண்ணியவர். சௌராஷ்டிர மொழியில் முதன்முதலில் திருக்குறளை மொழிபெயர்த்தவர். தமிழில் உள்ள சீர், தளை, அடி, தொடை ஆகியவை சிறிதும் மாறுபடாமல் மொழிபெயர்த்துள்ளார்.

சௌராஷ்டிர திருக்குறளை, மதுரை சித்தாச்ரமம், 1993ஆம் ஆண்டு பதிப்பித்தது.

விருது[தொகு]

2005இல் இவரின் சௌராஷ்டிரப் படைப்புக்கும், திருக்குறள் மொழிபெயர்ப்புக்குமாக “ஸெளராஷ்டிரசிறீ” என்ற பட்டத்தை, மதுரை சௌராஷ்டிர சமூக நலப்பேரவையினர் அளித்தனர்.

உசாத்துணை[தொகு]

  • தமிழ்நாட்டில் சௌராஷ்டர்: முழுவரலாறு, கே. ஆர். சேதுராமன், கே. எஸ். மீரா, சென்னை, மூன்றாம் பதிப்பு 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்குராம்&oldid=2783716" இருந்து மீள்விக்கப்பட்டது