சங்குமி புல்சுவாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்குமி புல்சுவாக்
Sangkhumi Bualchhuak
பிறப்பு1948
மிசோரம், இந்தியா
பணி
  • செயல்பாட்டாளர்
அறியப்படுவதுமிசோரமில் பெண்கள் அதிகாரம்
வாழ்க்கைத்
துணை
ராம்ஹ்லுனா கியாங்டே
விருதுகள்பத்மசிறீ

சங்குமி புல்சுவாக் (Sangkhumi Bualchhuak) மிசோரத்தில் பெண்கள் அதிகாரமளிப்பதற்கான காரணத்திற்காக அறியப்பட்ட ஒரு சமூக ஆர்வலர் ஆவார்.[1]

செயல்பாடு[தொகு]

சங்குமி மிசோ மகளிர் சங்கத்தின் தலைவராக இருந்தார். மிசோரமில் உள்ள பல உள்ளூர் பெண்கள் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உச்ச அமைப்பான மிசோ மகளிர் சங்கம், திருமண மசோதா 2013[2] மிசோ மரபுரிமை மசோதா[3] 2013, மற்றும் மிசோ விவாகரத்து மசோதா, 2013 நிறைவேற்றக் காரணமாக இருந்தது.[4]

தொழில்[தொகு]

சங்குமி முன்னாள் அரசு ஊழியர் ஆவார். இவர் மிசோரம் அரசாங்கத்தில் உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக பணிபுரிந்தவர்.[5] மேலும் மிசோரம் பொதுச் சேவை ஆணையத்தின் தலைவராகவும் சங்குமி பணியாற்றியுள்ளார். ஓய்வு பெற்ற பிறகு, இவர் மிசோ மகளிர் சங்கத்தினை வழிநடத்தினார்.[6] இவர் 2013-ல் சம்பை தெற்கு சட்டமன்றத் தொகுதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பினை இழந்தார்.[7][8]

விருதுகள்[தொகு]

சங்குமிக்கு 2021-ல் இந்திய அரசு பத்மசிறீ விருது வழங்கியது.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "League of extraordinary women". thehindu. பார்க்கப்பட்ட நாள் 18 November 2021.
  2. "Reforming Mizoram- Pi Sangkhumi". shethepeople. பார்க்கப்பட்ட நாள் 18 November 2021.
  3. "41 years struggle for gender equality in Mizoram". thenortheasttoday. பார்க்கப்பட்ட நாள் 18 November 2021.
  4. "Meet The Woman Who Has Been Leading Mizo Women's Push For Legal Reforms For 40 Years!". thebetterindia. பார்க்கப்பட்ட நாள் 18 November 2021.
  5. "Governor P.S. Sreedharan Pillai felicitates Pi B. Sangkhumi Padma Shree Award Recipient 2021". DIPR Mizoram. பார்க்கப்பட்ட நாள் 18 November 2021.
  6. "Mizoram's Padma awardee B Sangkhumi felicitated". etvbharat. பார்க்கப்பட்ட நாள் 18 November 2021.
  7. "Mizoram election: Very few women candidates in fray". Millennium post. பார்க்கப்பட்ட நாள் 18 November 2021.
  8. "Election history". Election fate. பார்க்கப்பட்ட நாள் 18 November 2021.
  9. "President Kovind confers Padma awards, 16 from NE among awardees". eastmojo.com. பார்க்கப்பட்ட நாள் 18 November 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்குமி_புல்சுவாக்&oldid=3681697" இலிருந்து மீள்விக்கப்பட்டது