உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். பி. வெங்கடேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சங்கீத ராஜன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எஸ். பி. வெங்கடேஷ்
பிற பெயர்கள்சங்கீதராஜன்
பிறப்பு(1955-03-05)மார்ச்சு 5, 1955
இறப்பு3 பெப்ரவரி 2026(2026-02-03) (அகவை 70) [1]
இசை வடிவங்கள்பின்னணி இசை
தொழில்(கள்)திரைப்பட இசையமைப்பாளர், இசைக்கருவி வாசிப்பவர்
இசைக்கருவி(கள்)கிடார் வாசிப்பாளர், பாடகர், வயலின் வாசிப்பாளர்

எஸ். பி. வெங்கடேஷ் (S. P. Venkatesh), சங்கீதராஜன் (Sangeetharajan, 5 மார்ச் 1955 – 3 பெப்ரவரி 2026) என்பவர் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் முதன்மையாக மலையாளப் படங்களில் பணியாற்றினார். சங்கீதராஜன் 80, 90-களின் பிற்பகுதியில் மலையாளத் திரைப்படத் துறையின் பாடல்களுக்காகப் பிரபலமானவர்.

தொழில்

[தொகு]

வெங்கடேசின் தந்தை பழனி ஒரு திறமையான மாண்டோலின் இசைக் கலைஞர். வாழ்க்கையின் தொடக்கத்தில், எஸ். பி. வெங்கடேஷ் கிட்டார், பாஞ்சோ, மாண்டோலின் போன்றவற்றை வாசித்தார், தொடக்க காலத்தில் சியாம், ரவீந்திரன் ஆகியோரிடம் உதவி இசையமைப்பாளராக இருந்தார். டென்னிஸ் ஜோசப் மலையாளத் திரைப்படத் துறையில் இவரை அறிமுகப்படுத்தினார். தம்பி கண்ணந்தனம் இயக்கிய ராஜவிண்டே மகன் படம் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. இந்தப் படமும், படத்தின் பாடல்களும் பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் விளைவாக 1990-களில் இவரது தொடர்ச்சியான வெற்றிப் படப் பாடல்கள் வெளியாயின. இவரது மிகவும் பிரபலமான திரைப்படப் பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்களாக இந்திரஜாலம், கிலுக்கம், மின்னாரம், ஸ்பாடிகம், துருவம், கௌரவர், ஜானி வாக்கர், கிழக்கன் பாத்ரோஸ், ஹிட்லர் ஆகியவை உள்ளன.

1993 ஆம் ஆண்டில், பைத்ருகாம், ஜனம் ஆகிய படங்களுக்கு இசையமைத்ததற்காகச் சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள மாநிலத் திரைப்பட விருதை வென்றார்.

1999 ஆம் ஆண்டில், பாபு கணேஷ், விசித்ரா நடித்த வெளிவராத தமிழ்த் திரைப்படமான இது முடிவதில்லை படத்திற்காக ஒரே நாளில் ஒன்பது பாடல்களைப் பதிவு செய்தார்.[2]

திரைப்படவியல்

[தொகு]

தமிழ்ப் படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "എസ്പി വെങ്കിടേഷ് അന്തരിച്ചു; മലയാളത്തിലെ പ്രിയഗാനങ്ങളുടെ ശില്‍പി..." Manorama News (in மலையாளம்). 3 February 2026.
  2. https://web.archive.org/web/20010312062330/http://movies.indiainfo.com/tamil/movienews/morenews1.html

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._பி._வெங்கடேஷ்&oldid=4460645" இலிருந்து மீள்விக்கப்பட்டது