சங்கீதா (பாக்கித்தானிய நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சங்கீதா
பிறப்புபர்வீன் ரிஸ்வி
14 சூன் 1947 (1947-06-14) (அகவை 73)
கராச்சி, பாம்பே மாகணம், பிரிட்டிசு இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர், நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1969 – தற்போது வரை
பெற்றோர்தையாப் உசைன் ரிஸ்வி
மெஹ்தாப் ரிஸ்வி
உறவினர்கள்கான் குடும்பம்

சங்கீதா (Sangeeta) என அழைக்கப்படும் பர்வீன் ரிஸ்வி (Parveen Rizvi) (பிறப்பு:1947 சூன் 14) பாக்கித்தானைச் சேர்ந்த ஒரு திரைப்பட நடிகையும், திரைப்படத் தயாரிப்பாளரும், தொலைக்காட்சித் தொடர்களின் இயக்குரும் ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பர்வீன் ரிஸ்வி 1947 சூன் 14 அன்று பிரிட்டிசு இந்தியாவின் கராச்சியில் பிறந்தார். இவரது தாய் மெஹ்தாப் ரிஸ்வியும் நிகழ்ச்சித் தொழிலில் ஈட்டுபட்டிருந்தார். கூடுதலாக, இவரது தங்கை நச்ரீன் ரிஸ்வி (தொழில் ரீதியாக கவிதா என்று அழைக்கப்படுபவர்) பாக்கித்தான் திரையுலகுடன் தொடர்புடையவர் . பிரிட்டிசு-அமெரிக்க நடிகை ஜியா கான் இவரது மருமகள் ஆவார்.

தொழில்[தொகு]

நடிப்பு[தொகு]

1969ஆம் ஆண்டில், சங்கீதா கோ-இ-நூர் (1969) என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றினார். இதை ஆகா உசைனி என்பவர் இயக்கியுள்ளார். [1] 1971ஆம் ஆண்டில், இவர் தனது பிறந்த இடமான கராச்சியில் இருந்து லாகூருக்குச் சென்று லாகூரில் லாலிவுட் திரைப்படங்களில் மிகவும் தீவிரமான வாழ்க்கையைத் தொடங்கினார். ரியாஸ் ஷாஹித்தின் திரைப்படமான யே அமன் (1971) என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தது பாக்கித்தான் இரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டது. இவர் பன்னிரெண்டு திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பின்னர், 1976ஆம் ஆண்டில் சொசைட்டி கேர்ல் என்ற திரைப்படத்தை சொந்தமாக தயாரித்து இயக்கினார். ஒரு நடிகை- தயாரிப்பாளர்-இயக்குனர் என்ற வகையில் சங்கீதா 120க்கும் மேற்பட்ட படங்களைக் கொண்டுள்ளார்.

திரைப்பட இயக்கம்[தொகு]

சங்கீதா 1976 ஆம் ஆண்டில் சொசைட்டி கேர்ல் என்ற தனது முதல் படத்தை இயக்கினார். இது வணிக ரீதியாக வெற்றி பெற்றது. [2] சங்கீதா, கவீதா, குலாம் மொஹியுதீன், நய்யார் சுல்தானா, பஹார் பேகம் ஆகியோர் நடித்த முஜய் கலாய் லகா லோ என்பது இவரது இரண்டாவது இயக்கமாகும். 1978ஆம் ஆண்டில், விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட முத்தி பார் சவால் திரைப்படத்தை இயக்கியுள்ளார். [3] இவரது திரைப்படம் மியான் பிவி ராசி (1982) அதன் பிளாட்டினம் ஜூபிலியைக் கொண்டாடியது மேலும் மிகவும் வெற்றிகரமான திரைப்படமாகும். இவரது தோரி சி பெவாபாய் என்ற படம் அமெரிக்காவில் படமாக்கப்பட்ட முதல் பாக்கித்தான் படமாகும். [4] 1990களில், கிலோனா (1996) , <i id="mwOw">நிகா</i> (1998) போன்ற வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களை இயக்கியுள்ளார். 2019ஆம் ஆண்டில், சிர்ஃப் டம் ஹாய் டு ஹோ என்ற காதல் படத்தை இயக்கியுள்ளார். [5]

சொந்த வாழ்க்கை[தொகு]

சங்கீதாவின் முதல் திருமணம் சக பாக்கித்தான் நடிகர் உமாயூன் குரேசியுடன் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் இருந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த திருமணம் தோல்வியடைந்து இவர்கள் விவாகரத்து செய்தனர். பின்னர் பிரபலமான தொழிலதிபர் நவீத் அக்பர் பட் என்பவரை மணந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]