உள்ளடக்கத்துக்குச் செல்

சங்கீதா ஸ்ரீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கீதா ஸ்ரீனிவாசன்
பிறப்புசூலை 19, 1975 (1975-07-19) (அகவை 50)
மூலாங்குன்னத்துக்காவு, திருச்சூர் மாவட்டம், கேரளம்
தொழில்சிறுகதை எழுத்தாளர், புதின எழுத்தாளர்
தேசியம் இந்தியா
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஆசிட் சலாபம் பூக்கள் ஏரோபிளேன்
குறிப்பிடத்தக்க விருதுகள்மொழிபெயர்பிற்கான கேரள சாகித்ய அகாதமி விருது
துணைவர்பி. கே. ஸ்ரீனிவாசன்
பிள்ளைகள்1
பெற்றோர்சாரா ஜோசஃப்
கோட்டக்கள் ஜோசப் Joseph

சங்கீதா ஸ்ரீனிவாசன் (Sangeetha Sreenivasan) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த புதின எழுத்தாளரும், குழந்தைகள் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் மற்றும் ஆசிரியரும் ஆவார். இவர் மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதுகிறார். மேலும் இரு மொழிகளிலும் மொழிபெயர்க்கிறார். 2020 ஆம் ஆண்டில், இத்தாலிய எழுத்தாளர் எலினா ஃபெராண்டே எழுதிய 'தி டேஸ் ஆஃப் அபாண்டன்மென்ட்' என்ற புதினத்தின் மலையாள மொழிபெயர்ப்பான உபெக்ஷிக்கப்பெட்டா தினங்களுக்காக மொழிபெயர்ப்புக்கான கேரள சாகித்ய அகாதமி விருதைப் பெற்றது. இவர் மலையாள எழுத்தாளர் சாரா ஜோசப்பின் மகள் ஆவார்.

இளமை வாழ்க்கை

[தொகு]

சங்கீதா ஜூலை 19,1975 அன்று கேரளாவின் திருச்சூர் மாவட்டத்திலுள்ள மூலாங்குன்னத்காவுவில் எழுத்தாளர் சாரா ஜோசப் மற்றும் பொது ஆர்வலர் கோட்டக்கல் ஜோசப் ஆகியோருக்கு பிறந்தார்.[1] புதினம், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு போன்ற பல்வேறு துறைகளில் அறியப்பட்ட இவர் ஒரு கித்தார் கலைஞர் மற்றும் ஆசிரியரும் ஆவார்.[2] திருச்சூர் கேரள வர்மா கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற சங்கீதா கேரள அரசு மேல்நிலைத் துறையில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

சொந்த வாழ்க்கை

[தொகு]

சங்கீதா கட்டடக் கலைஞர் பி. கே. ஸ்ரீனிவாசன் என்பவரை மணந்தார். இவர்களுக்கு மேதா ஸ்ரீனிவாசன் என்ற ஒரு மகள் உள்ளார்.[3]

இலக்கிய வாழ்க்கை

[தொகு]

சங்கீதா முதலில் ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கினார்.[4] 2004 ஆம் ஆண்டில், இவரது கதை ஒன்று இன்டியன் லிட்ரேட்சர் என்ற இலக்கிய இதழில் வெளியிடப்பட்டது.[4] ஆங்கிலத்தில் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான பெங்குயின்ஸ் ஹூ லாஸ்ட் தி மார்ச், யதி புக் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.[4] பின்னர் வெள்ளிமீன்சட்டம் மற்றும் கல்லித்தள்ளகள் Vs சிங்கக்குட்டிக்கள் என்ற இரண்டு குழந்தைகளுக்கான புத்தகங்களை எழுதினார். அபரகந்தி என்பது சங்கீதாவின் முதல் புனைகதை நூலாகும்.[4] பின்னர் ஆசிட் என்ற தனது இரண்டாவது புத்தகத்தை மலையாளத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.[4] தடையில்லாத பெண்களின் வாழ்க்கையைப் பற்றியும் பெண்களின் பாலியல் பற்றியும் எழுத விரும்புவதாக சங்கீதா கூறுகிறார்.[5] தனது எழுத்திலும் வாழ்க்கையிலும் தனது தாயின் செல்வாக்கு மகத்தானது என்று கூறுகிறார்.

கவிஞர் மேத்தில் ராதாகிருஷ்ணன் தனது மேத்தில் கவிதகள் என்ற புத்தகத்தை சங்கீதாவுக்கு அர்ப்பணித்து, “பெங்குயின் ஹூ லாஸ்ட் தி மார்ச் என்ற புத்தகத்தை எழுதிய எனது சிறந்த நண்பருக்கு” என அறிமுகத்தில் எழுதியுள்ளார்.[4]

நடிகரும் இயக்குநருமான மதுபால் சங்கீதாவின் 'அபரகந்தி என்ற புதினத்தை திரைப்படமாக உருவாக்க முடிவு செய்தார். அவரது வேண்டுகோளின்படி சங்கீதா திரைக்கதையை எழுதினார். ஆனால் சில சூழ்நிலைகள் காரணமாக படம் பின்னர் ரத்து செய்யப்பட்டது.[6]

ஆசிட்

[தொகு]

ஆசிட் என்ற நூல் சங்கீதாவின் மிகவும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட புதினமாகும். இது முதலில் மலையாளத்தில் எழுதப்பட்டு பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

ஹிந்துஸ்தான் டைம்ஸைச் சேர்ந்த சோனாலி மஜூம்தார், ஆசிட், ஓர் புயல் மற்றும் கொந்தளிப்பான பயணம், இது மாயத்தோற்றம், குழப்பம், மற்றும் அசைக்க முடியாத ஒரு மனச்சோர்வு நிறைந்தது என எழுதினார்.[7] எழுத்தாளர் கே. ஆர். மீரா தி இந்துவில் எழுதிய ஒரு மதிப்பாய்வில், இரண்டு பெண்களுக்கு இடையிலான ஒரே பாலின உறவை ஆழமாக கையாளும் முதல் புத்தகம் இது என்று எழுதினார்.[8] தி டெலிகிராப் இந்தியாவின் எஸ். டி. சௌத்ரி, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவமான தனிமையின் சொந்தக்காரராக, நாவல் கதாபாத்திரங்கள் கடந்து செல்லும் வாழ்க்கையின் சிக்கல்களை மறுக்கவில்லை. என்று கூறினார்.[9] கதாபாத்திரங்களின் வெறுமையை விவரிக்கப் பயன்படுத்தப்படும் பிம்பம் வலுவானது என்றும் அவர் எழுதினார்.[10]

விருதுகளும் கௌரவங்களும்

[தொகு]
  • உபெக்ஷிக்கப்பெட்டா தினங்களுக்கு மொழிபெயர்ப்புக்கான கேரள சாகித்ய அகாதமி விருது 2020 , இத்தாலிய எழுத்தாளர் எலினா ஃபெராண்டே எழுதிய தி டேஸ் ஆஃப் அபாண்டன்மென்ட் நாவலின் மலையாள மொழிபெயர்ப்பு[11]
  • ஆசிட் புதினத்திற்காக தோப்பில் ரவி விருது 2017[10]
  • 2015 மலையாளத்தூர் விருது (அபரகந்தி) [12]
  • நூரானாட் ஹனீப் நாவல் விருது [13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "എഴുത്തുകാര്‍ ആക്രമിക്കപ്പെടുന്നു ; നാം ജീവിക്കുന്നത് ഭീതി ഒരു അനുഭവമായി നിലനില്‍ക്കുന്ന കാലത്ത് : സാറാ ജോസഫ്". azhimukham.com (in மலையாளம்). 15 February 2019. Archived from the original on 20 September 2022. Retrieved 21 February 2022.
  2. "സംഗീത ശ്രീനിവാസന്‍" (in en). https://www.mathrubhumi.com/books/special/mbifl2019/speakers/sangeetha-sreenivasan-mbifl-2019-1.3477581. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. Sreenivasan, Sangeetha (12 April 2021). Budhini (Acknowledgement) (in ஆங்கிலம்). Penguin Random House India Private Limited. ISBN 978-93-90914-33-3.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 "'പെട്ടെന്ന് സമൂഹത്തിൽ ഒരു അനീതി കണ്ടു; ഉടൻ അതെടുത്ത് നോവലാക്കണം, കഥയാക്കണം എന്നൊന്നും എനിക്കു തോന്നാറില്ല'; സംഗീത ശ്രീനിവാസൻ | sangeetha sreenivasan lit interview special". vanitha.in. வனிதா (இதழ்).
  5. "അപരകാന്തി സിനിമയാക്കണമെന്ന് ആവശ്യപ്പെട്ടു, ചെയ്തു, പക്ഷേ...". ManoramaOnline. https://www.manoramaonline.com/literature/interviews/sangeetha-sreenivasan-author-of-aparakanthi.html. 
  6. "അപരകാന്തി സിനിമയാക്കണമെന്ന് ആവശ്യപ്പെട്ടു, ചെയ്തു, പക്ഷേ...". https://www.manoramaonline.com/literature/interviews/sangeetha-sreenivasan-author-of-aparakanthi.html. 
  7. Majumdar, Sonali (19 October 2018). "Review: Acid by Sangeetha Sreenivasan" (in en). https://www.hindustantimes.com/books/review-acid-by-sangeetha-sreenivasan/story-ovCsG0rPAYLMRDRG90Uc0J.html. 
  8. Meera, K. R (14 September 2018). "'Acid' by Sangeetha Sreenivasan" (in en-IN). https://www.thehindu.com/books/acid-they-dont-feel-guilty-about-pursuing-happiness/article24943984.ece. 
  9. Chaudary, S. D.. "Sangeetha Sreenivasan's novel Acid is a trip". https://www.telegraphindia.com/culture/books/her-own-person/cid/1670374. 
  10. 10.0 10.1 Chaudary, S. D.. "Sangeetha Sreenivasan's novel Acid is a trip". www.telegraphindia.com. https://www.telegraphindia.com/culture/books/her-own-person/cid/1670374. 
  11. "സേതുവിനും പെരുമ്പടവം ശ്രീധരനും സാഹിത്യ അക്കാദമി ഫെലോഷിപ്പ്". Malayalam News. 17 August 2021. https://www.malayalamnewsdaily.com/node/501541/kerala/sahitya-acadamy. 
  12. "Malayattoor Award". The New Indian Express. https://www.newindianexpress.com/cities/thiruvananthapuram/2015/feb/07/malayattoor-award-714397.html. 
  13. "നൂറനാട് ഹനീഫ് നോവൽ പുരസ്‌കാര സമർപ്പണം നാളെ". Keralakaumudi Daily. https://keralakaumudi.com/news/news.php?id=614477&u=local-news. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கீதா_ஸ்ரீனிவாசன்&oldid=4383522" இலிருந்து மீள்விக்கப்பட்டது