சங்கீதா வீரரத்ன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Sangeetha Weeraratne
සංගීතා වීරරත්න
சங்கீதா வீர ரத்ன 2019
பிறப்புதியான் ஹேம மாலி சங்கீதா வீர ரத்ன
13 திசம்பர் 1973 (1973-12-13) (அகவை 49)
நீர்கொழும்பு, இலங்கை
தேசியம்இலங்கையர்
பணிநடிகை,தயாரிப்பாளர், வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
1991 – தற்சமயம் வரை
வாழ்க்கைத்
துணை
ரொசாந்த கரியப் பெரும
விருதுகள்சரசவிய சிறந்த நடிகை, சரசவிய மிக பிரபலமான நடிகை விருது

தியன் ஹேமமாலி சங்கீதா வீரரத்ன (Sangeetha weeraratne) பிறப்பு 13 திசம்பர் 1973) இலங்கையைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார். இவர் தனது பதினாறாவது வயதில் பிரபல இயக்குனர் ரோய டி சில்வா இயக்கத்தில் கமல் அதராராய்சி உடன்  இணைந்து இட்ஸ் அ மெட்டர் ஒப் டைம் திரைப்படத்தில் அறிமுகமானார். இத் திரைப்படம் 1990 இல் வெளியானது. எச். டி. பிரேம ரத்ன இயக்கத்தில் வெளியான சப்த கன்யா திரைப்படத்தில் நடித்தமையால் பிரபலமானார். இத்திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த புதுமுக நடிகைக்கான விருதைப் பெற்றுக் கொண்டார். 50 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இலங்கை திரைத்துறையில் வெற்றி நட்சத்திரமாக திகழ்கின்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இலங்கை திரைத்துறையில் வெற்றி நட்சத்திரமாக திகழ்கின்றார். சங்கீதா வீரரத்ன  ஒளிப்பதிவாளர் திமோதி வீரரத்ன, டெய்சி வீரரத்ன ஆகியோரின் இரண்டாவது புதல்வியாவார். சங்கீதா தனது ஆரம்ப கல்வியை பாணதுறையில் சென்ட் ஜோன்ஸ் கல்லூரியில் கற்றார். கொழும்பு மெதோடிஸ்ட் கல்லூரியில் மேல் நிலை கல்வியை கற்றார்.

இவரது மூத்த சகோதரி நயனதாரா வீரரத்ன ஆத்திரேலியாவில் வசிக்கின்றார். சங்கீதா தொழிலதிபர் ரொசாந்த காரியப்பெரும என்பவரை 2002 இல் திருமணம் முடித்தார்.[1]

பணி[தொகு]

சங்கீதா வெள்ளித்திரையில் நன்கு அறியப்பட்ட இயக்குனரான ரோய் டி சில்வாவின் இட்ஸ் அ மெட்டர் ஓப் டைம்ஸ் திரைப்படத்தில் அறிமுகமானார். அக்கால புகழ்பெற்ற நட்சத்திரங்களான மாலினி பொன்சேகா, விஜய குமாரதுங்க, காமினி பொன்சேகா ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

சங்கீதா பதின்ம வயதினராக இருந்தபோது திரைப்பட துறைக்குள் நுழைந்தார். ரோய் டி சில்வா இவரது திறமையை பாராட்டி ஊக்குவித்தார்.

2001 ஆம் ஆண்டு அஸ்வசும என்ற திரைப்படத்திற்காக சரசவிய சிறந்த நடிகை விருதைப் பெற்றார். சரசவிய மிக பிரபல நடிகையாக 2001-2003 மூன்றாண்டுகள் வாகையாளராக இருந்துள்ளார்.

பல்வேறு பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். சில நகைச்சுவை வெற்றிப்படங்களிலும் நடித்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு வசந்தி ஒபயசேகர இயக்கிய செவ்வந்தி திரைப்படத்தைத் தயாரித்தார்.

விருதுகள்[தொகு]

பல பிரிவுகளில் பல முறை பல மாநில விருதுகளை பெற்றுள்ளார்.[2]

சரஸ்வதி திரைப்பட விழா[தொகு]

ஆண்டு நியமனம் / பணி விருது விளைவு
1993 சப்த கன்யா சிறந்த புதுமுகம் வென்றது
1994 நொமியன மினிசு சிறந்த நடிகை வென்றது
1995 மாருதய மெரிட் விருது வென்றது
2002 மாருதய மிகவும் பிரபலமான நடிகை வென்றது

ஜனாதிபதி திரைப்பட விழா[தொகு]

ஆண்டு நியமனம் / பணி விருது விளைவு
1999 பவுரு வளலு சிறந்த துணை நடிகை வென்றது

விமர்சக விருதுகள்[தொகு]

ஆண்டு நியமனம் / பணி விருது விளைவு
1996 தொரகட மாராவ சிறந்த நடிகை வென்றது

ஒசிஐசி விருதுகள்[தொகு]

ஆண்டு நியமனம் / பணி விருது விளைவு
1998 தொரகட மாராவ சிறந்த நடிகை வென்றது

பிற விழாக்கள்[தொகு]

ஆண்டு நியமனம் / பணி விருது விளைவு
2000 இலங்கை கலைகளுக்கான ஜூனியர் சேம்பர் ஆஃப் சிறப்பான இளம் ஆளுமை வென்றது
2001 அஸ்வெசும சிறந்த நடிகை வென்றது
2001 அஸ்வெசும மிகவும் பிரபலமான நடிகை வென்றது

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304043702/http://www.sundayobserver.lk/2007/09/23/spe03.asp. 
  2. "Sangeetha in producer's role". The Sunday Times. http://www.sundaytimes.lk/060806/tv/tvp1.htm. பார்த்த நாள்: 11 March 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கீதா_வீரரத்ன&oldid=3552635" இருந்து மீள்விக்கப்பட்டது