சங்கீதா பாட்டீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கீதா பாட்டீல் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும், லிம்பாயத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குசராத்தின் சட்டமன்ற உறுப்பினருமாவார் . [1] இவர் 2012, 2017ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை ஒரே தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர், 2012இல் இந்திய தேசிய காங்கிரசுசின் சுரேஷ் சோனாவாலேவை 30,321 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். [2] இவர் மீண்டும் அதே தொகுதியிலிருந்து 2017இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

பாட்டீல் தனது தொகுதியில் 'தொந்தரவு செய்யப்பட்ட பகுதிகள் சட்டம்' விதிக்க முயன்றார். இது ஒரு சமூக உறுப்பினரின் சொத்துக்களை மற்றொரு சமூக உறுப்பினருக்கு மாவட்ட ஆட்சியாளரின் முன் அனுமதியின்றி விற்பனை செய்வதைத் தடுக்கிறது. [3] [4] [5] இவர் உள்ளூர் சிவசேனா தலைவரை பயன்படுத்தி தனது மூன்றாம் ஆண்டு இளங்கலைத் தேர்வுக்கு போலி தேர்வாளரை வைத்து தேர்வெழுதியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து அவதூறு வழக்கொன்றைத் தாக்கல் செய்தார். [6] [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Gujarat Assembly Elections 2017: BJP's Patil Sangitaben wins from Limbayat constituency". www.timesnownews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-29.
  2. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  3. "Gujarat BJP MLA from Surat seeks imposition of Disturbed Areas Act in Limbayat constituency". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 2019-11-29.
  4. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  5. "Surat: BJP MLA seeks imposition of 'Disturbed Areas Act' to prevent Muslims from acquiring residential properties of Hindus". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-11-29.
  6. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  7. "Limbayat BJP MLA files defamation case against Shiv Sena leader over allegations of using dummy in exam". The Indian Express (in Indian English). 2018-06-03. பார்க்கப்பட்ட நாள் 2019-11-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கீதா_பாட்டீல்&oldid=3113356" இலிருந்து மீள்விக்கப்பட்டது