சங்கீதா தனபால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கீதா தனபால் (Sangeetha Thanapal) (1983கள்) சிங்கப்பூரைச் சேர்ந்த சமூக விமர்சகரும் அரசியல் ஈடுபாடுடையவரும் ஆவார்.

அரசியல் கருத்துக்கள்[தொகு]

இவர், சிங்கப்பூரில் இன உறவுகள் குறித்து பெருமளவில் எழுதியுள்ளார். [1] சிங்கப்பூரில் சீன மேலாதிக்கத்தை விவரிக்க "சீன சலுகை" என்ற வார்த்தையை இவர் உருவாக்கினார். அதை " வெள்ளை சலுகைக்கு ஒத்ததாக" வரையறுத்தார். இவரது கூற்றுப்படி, "சிங்கப்பூரில் ஒருவர் சீனராக இருப்பதால், சிறுபான்மையினருடன் ஒப்பிடும்போது அவர் உயர்ந்த இடத்தில் வாழ்க்கையைத் தொடங்குகிறார்." [2]

ஆகத்து 2015 இல், இவர் முகநூலில் ,சிங்கப்பூரின் சட்டம் மற்றும் வெளியுறவு அமைச்சர் கே. சண்முகம் மலாய் முஸ்லிம்களை அச்சுறுத்த்தும் "முஸ்லிம்களின் இசுலாமியத்திற்கு எதிரான மதவெளியாளர்" என்று எழுதினார். பின்னர் இவர் தனது கருத்துக்களுக்காக சண்முகத்திடம் மன்னிப்பு கேட்டு தனது முகநூல் பதிவினை நீக்கிவிட்டார். [3] [4]

ஏப்ரல் 2018 இல், சிங்கப்பூர் ஒரு "பயங்கர இனவெறி நாடு" என்றும் "சீன மேலாதிக்க அரசு" என்றும் இவர் முகநூலில் எழுதினார்.

நாட்டின் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 298 ஏ இன் கீழ் "மதம் அல்லது இனம் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை வளர்ப்பதற்காக" சிங்கப்பூர் காவல்துறை 2019 சனவரியில் இவருக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்தது. இவர் காவல்துறையினருடனான சந்திப்பை "மிகவும் அதிர்ச்சிகரமானதாக" விவரித்தார். மேலும், தற்காலிகமாக தனது முகநூல் பக்கத்தை செயலிழக்க செய்தார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர், சிங்கப்பூரின் தமிழக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாயால் வளர்க்கப்பட்டார். இவர், இராபிள்ஸ் இளையோர் கல்லூரி, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ,சசெக்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்றார் . [5] இவர் 2016இல் ஆத்திரேலியாவின் மெல்போர்னுக்குச் [6] [7] சென்று தங்கியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Tan, Cher (8 October 2018). "Interview #75 — Sangeetha Thanapal". Liminal. பார்க்கப்பட்ட நாள் 25 June 2020.
  2. Tan, Cher (8 January 2017). "What Privilege Looks Like in Singapore". Vice Media. பார்க்கப்பட்ட நாள் 25 June 2020.
  3. "Law and Foreign Minister K. Shanmugam to make police report over 'inaccurate and seditious' Facebook post". The Straits Times. 28 August 2015. https://www.straitstimes.com/politics/law-and-foreign-minister-k-shanmugam-to-make-police-report-over-inaccurate-and-seditious. 
  4. "Shanmugam meets with individual who made seditious remarks". Today. 29 August 2015. https://www.todayonline.com/singapore/shanmugam-meets-individual-who-made-seditious-remarks. 
  5. Wang, Beverley. "Who's on the team? Unpacking POC". ABC. பார்க்கப்பட்ட நாள் 25 June 2020.
  6. Tan, Cher (8 October 2018). "Interview #75 — Sangeetha Thanapal". Liminal. பார்க்கப்பட்ட நாள் 25 June 2020.Tan, Cher (8 October 2018). "Interview #75 — Sangeetha Thanapal". Liminal. Retrieved 25 June 2020.
  7. Hajela, Deepti. "'Crazy Rich Asians' spurs conversation over representation". https://apnews.com/febbec429bbf4d6a81546c66d310feaf/'Crazy-Rich-Asians'-spurs-conversation-over-representation. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கீதா_தனபால்&oldid=3114567" இலிருந்து மீள்விக்கப்பட்டது