சங்கீதா சஜித்
சங்கீதா சஜித் | |
---|---|
பிறப்பு | சங்கீதா சஜித் 1976 கோட்டயம், கேரளா, இந்தியா |
இறப்பு | மே 22, 2022 | (அகவை Expression error: Unrecognized punctuation character "–".–45–46)
பணி | பின்னணிபாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 1992–2021 |
இசை வாழ்க்கை | |
இசை வடிவங்கள் |
|
இசைக்கருவி(கள்) | பாடகர் |
சங்கீதா சஜித் (Sangeetha Sajith)(1976 - 22 மே 2022) என்பவர் ஓர் இந்தியப் பின்னணிப் பாடகியும், தென்னிந்திய திரைப்படத் துறையில் தன்னுடைய பணிகளுக்காக அறியப்பட்டவரும் ஆவார்.[1] சங்கீதா மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் 200க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த 1996ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படமான மிஸ்டர் ரோமியோவின் "தண்ணீரைக் காதலிக்கும்" பாடலின் மூலம் சங்கீதா தனது திருப்புமுனையைப் பெற்றார்.[2]
வாழ்க்கையும் தொழிலும்
[தொகு]சங்கீதா 1992-ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படமான நாளைய தீர்ப்பு மூலம் தனது பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். 1998-ஆம் ஆண்டு என்னு ஸ்வாந்தம் ஜானகிக்குட்டி திரைப்படத்தின் ஆம்பிலிபூவட்டம் பொன்னுருளில் என்ற பாடலின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார். ராகிளிப்பட்டில் இருந்து "தூம் தும் துரேயேதோ", காக்ககுயிலில் இருந்து "ஆளரே கோவிந்தா", கேரள வர்ம பழசி ராஜாவின் "ஓடத்தண்டில் தாளம் கொடுக்கும்" மற்றும் அய்யப்பனும் கோஷியும் படத்திலிருந்து "தாளம் போய் தப்பும் போய்" போன்ற மலையாளப் பாடல்களுக்காக இவர் மலையாளப் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமானவர். பிருத்விராஜ் நடித்த குருதி படத்தின் கருப்பொருள் பாடல் தான் மலையாளத்தில் அவர் பாடிய கடைசிப் பாடல்.[3]
மலையாளம் மற்றும் தமிழில் 100க்கும் மேற்பட்ட இசை நாடாக்களிலும் சங்கீதா பாடியுள்ளார். அடுக்குகளில் பணி உண்டு படத்திற்கும் இசையமைத்துள்ளார்.[4] சங்கீதா கே.பி. சுந்தராம்பாளின் குரலைப் பின்பற்றுவதற்கும் பெயர் பெற்றவர். தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது வழங்கும் விழாவின் போது சங்கீதா பாடியபோது, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா மேடைக்கு வந்து தான் அணிந்திருந்த தங்கச் சங்கிலியினைச் சங்கீதாவிற்குப் பரிசாக வழங்கினார்.[5]
இசைத் தொகுப்பு
[தொகு]தமிழ்
ஆண்டு | திரைப்படம் | பாடல் | இசையமைப்பாளர் | பாடகர் (துணை) |
---|---|---|---|---|
1992 | நாளைய தீர்ப்பு | "எம்டிவி பார்த்துபுட்டா" | மணிமேகலை | |
1994 | சரிகமபத நீ | "பைத்தியம் பைத்தியம்" | தேவா | |
1995 | லக்கி மேன் | "பலான பார்ட்டி" | ஆதித்தியன் | ஆதித்தியன் |
1995 | லக்கி மேன் | "யார் செய்த மாயம்" | ஆதித்தியன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
1995 | மாமன் மகள் | “வடுகப்பட்டி வயசு குட்டி” | ஆதித்தியன் | சாகுல் ஹமீது |
1996 | மிஸ்டர் ரோமியோ | "தண்ணீரைக் காதலிக்கும்" | ஏ. ஆர். ரகுமான் | |
1996 | கிழக்கு முகம் | "ஆத்துக்குள்ளே" | ஆதித்தியன் | பி. உன்னிகிருஷ்ணன் |
1998 | ஜீன்ஸ் | "வாராயோ தோழி" | ஏ. ஆர். ரகுமான் | சோனு நிகம், சாகுல் ஹமீது, ஹரிணி, |
2000 | சிநேகிதியே | "இராதை மணதில்" | வித்தியாசாகர் | சித்ரா, சுஜாதா |
"கல்லூரி மலரே" | ||||
2006 | தலைநகரம் | "சூ மந்திரகாளி" | டி. இமான் | பங்கி சங்கர், சுஜாதா |
2022 | பிகில் | "வெரிதானம்" | ஏ. ஆர். ரகுமான் | விஜய் |
இறப்பு
[தொகு]சங்கீதா 22 மே 2022 அன்று இறந்தார். சிறுநீரகம் தொடர்பான பிரச்சனையால் அவதிப்பட்டதாக கூறப்பட்ட பின்னர் இறந்தார். [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sangeetha Sajith, the late playback singer, who wowed Jayalalithaa". www.onmanorama.com. Retrieved 2023-01-10.
- ↑ "ഗായിക സംഗീത സചിത് ഇനി ഓർമ്മ". Indian Express Malayalam (in மலையாளம்). Retrieved 2023-01-10.
- ↑ "Playback singer Sangeetha Sajith passes away at 46". The News Minute (in ஆங்கிலம்). 22 May 2022. Retrieved 2023-01-10.
- ↑ "दुखद: मशहूर सिंगर संगीता साजिथ का 46 साल की उम्र में निधन, किडनी की समस्या से थीं पीड़ित". Amar Ujala (in இந்தி). Retrieved 2023-01-10.
- ↑ "ഗായിക സംഗീത സചിത് അന്തരിച്ചു സംഗീതമാധുര്യം ഇനി ഓർമ". ETV Bharat News (in மலையாளம்). 22 May 2022. Retrieved 2023-01-10.
- ↑ "Veteran South Indian singer Sangeetha Sajith passes away at 46". India Today (in ஆங்கிலம்). 22 May 2022. Retrieved 2023-01-10.