உள்ளடக்கத்துக்குச் செல்

சங்கிலியாண்டபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கிலியாண்டபுரம் (Sangiliyandapuram) என்பது, இந்தியாவின் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி நகரில் உள்ள ஒரு பகுதி ஆகும்.

சொற்பிறப்பு

[தொகு]

இந்த சொற்பிறப்பியல் இப்பகுதியில் அமைந்துள்ள சங்கிலியாண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலில் இருந்து வந்தது. சங்கிலியாண்டபுரம், பொன்மலை பட்டறை மற்றும் திருச்சி நகரத்திற்கு மிக அருகில் இருக்கிறது. எனவே, பட்டறையில் இருந்து ஓய்வு பெற்ற இரயில்வே ஊழியர்கள் இந்த பகுதியில் தங்கள் வீடுகளை அமைத்தனர். மேலும், இவர்களே இந்த பகுதியில் குடியேறிய முதல் நபர்கள் எனக் கருதப்படுகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் பிண்டோ காலனியைச் சேர்ந்த ஆங்கிலோ-இந்தியர்கள் ஆவர்.

பிரபலம்

[தொகு]

இந்தப் பகுதி தமிழ் திரைப்படம் மற்றும் அலுமினிய உலோக வேலைகளுக்கு பங்களித்ததற்காக பிரபலமானது. சங்கிலியாண்டபுரம் தமிழ்நாட்டில் அலுமினிய உலோக வேலைகளின் மையமாக இருந்தது. திருச்சி மெட்டல்ஸ் லிமிடெட் உட்பட பல உலோக பட்டறைகள் இங்கே உள்ளன. துருப்பிடிக்காத ஸ்டீலின் வருகையால், அலுமினிய உலோக வணிகமானது அதன் ஒளியை இழக்கத் தொடங்கியது. இப்போது ஒரு சில அலுமினிய உலோக பட்டறைகள் மட்டுமே இப்பகுதியில் உள்ளன.

பாய்ஸ் கம்பெனி

[தொகு]

இப்பகுதியில், இருந்த எம்.ஆர்.ராதா காலனி, பிரபல நடிகர் எம்.ஆர்.ராதாவின் பண்ணை இல்லமாக இருந்தது. அவர் தனது பாய்ஸ் நிறுவனத்தை இங்கிருந்து நடத்தினார். பாய்ஸ் கம்பெனி தமிழ் திரையுலகிற்கு நுழைவுச் சீட்டாக இருந்தது. பாய்ஸ் நிறுவனத்தின் சில நடிகர்களில் தனது 10 வயதில், திருச்சிராப்பள்ளிக்குச் சென்று சங்கிலியாண்டபுரத்தில் பாய்ஸ் நாடகக் குழுவில் சேர்ந்து மேடை நாடகங்களில் பங்கேற்கத் தொடங்கிய சிவாஜி கணேசன்,[1] சிவாஜி கணேசனை மேடை நாடகத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்த காக்கா ராதாகிருஷ்ணன் [2][3] ரவிச்சந்திரன் போன்றவர்கள் ஆவர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தனது 10ஆவது வயதில், இங்கு குடிபெயர்ந்து மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பாய்ஸ் நாடக குழு பயிற்சியாளர்களிடமிருந்து, நடிப்பு மற்றும் நடனம் கற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பரதநாட்டியம், கதக் மற்றும் மணிப்பூரி நடன வடிவங்களில் பயிற்சி பெற்றார். சிவாஜி கணேசன் சங்கிலியாண்டபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது பாய்ஸ் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் நடிப்புத் துறையில் அதிக உயரத்திற்கு சென்றார்.[4] இந்தக் காலனியில் ஒரு திரையரங்கு, பயிற்சி செய்ய ஒரு மேடை அமைப்பு மற்றும் எம்.ஆர்.ராதாவின் சமாதி ஆகியவை இருந்தன. எம். ஆர். ராதா அவர்களின் பிரபலமான குழந்தைகள் ராதிகா, ராதா ரவி, நிரோஷா ஆகியோர் தங்கள் குழந்தை பருவத்தை இங்கு கழித்தனர். வீட்டு மனை சொத்துக்களின் வளர்ச்சிக்காக இன்று அது முற்றிலும் இடிக்கப்பட்டுள்ளது.

பிற தகவல்

[தொகு]

சங்கிலியாண்டபுரத்தில் மதானி மசூதி, செயின்ட். தெரசா தேவாலயம், செல்வ காளி அம்மன் கோயில், பிள்ளையர் கோயில் போன்ற அனைத்து மத சார்புடைய திருத்தலங்கள் உள்ளன. மேலும், ஏழு டாலர் கான்வென்ட் என்ற பெயரில் ஆங்கில வழி மூலமாக கற்பிக்கும் பள்ளி இப்பகுதியில் உள்ளது. [5] இது இங்கு அமைந்துள்ள ஒரே பள்ளி ஆகும். இன்று சங்கிலியாண்டபுரம், மரங்கள் மற்றும் ஒட்டு பலகைகளின் வர்த்தகத்தில் பிரபலமானதாக உள்ளது. பல மொத்த விற்பனையாளர்கள் மற்றும் மர வேலைகள் சார்ந்த பணியில் இருப்பவர்கள் இங்கே தங்கள் கடைகளைக் கொண்டுள்ளனர். தனிப்பட்ட சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகள் இப்பகுதியில் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.[6]

பிரதான சாலை - தேசிய நெடுஞ்சாலை பாதை அணுகல்

[தொகு]

சங்கிலியாண்டபுரம் பிரதான சாலை, செந்தனீர்புரத்தில் உள்ள பாலக்கரைக்கும் தேசிய நெடுஞ்சாலை 45 க்கும் இடையிலான முக்கிய இணைப்பை உருவாக்குகிறது. இதன் மூலம் நகர வளாகத்திற்குள் வசிக்கும் மக்களுக்கு சென்னை, திண்டுக்கல், மதுரை, தஞ்சை மற்றும் புதுக்கோட்டை செல்லும் பாதைக்கு எளிதான அணுகல் உள்ளது.

பேருந்து பாதை அணுகல்

[தொகு]

பேருந்து பாதை எண் 52, பின்வரும் வழித்தடங்களை இணைக்கிறது. சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், திருச்சி ரயில் நிலையம் மற்றும் செந்தனீர்புரம்.

அரசமரம், பிள்ளையர் கோயில் / மரியம் திரைஅரங்கு, ராதா காலனி ஆகியவை சங்கிலியாண்டபுரத்திற்குள் உள்ள முக்கிய பேருந்து நிறுத்தங்கள் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Friday Review Chennai / Interview: Into realms of the past". The Hindu. 19 January 2007 இம் மூலத்தில் இருந்து 17 April 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120417050106/http://www.hindu.com/fr/2007/01/19/stories/2007011900100200.htm. பார்த்த நாள்: 2 June 2011. 
  2. Into realms of the past பரணிடப்பட்டது 2012-04-17 at the வந்தவழி இயந்திரம், மாலதி ரங்கராஜன், த இந்து, சூன் 19, 2007
  3. Contented with her lot பரணிடப்பட்டது 2007-02-04 at the வந்தவழி இயந்திரம், மாலதி ரங்கராஜன், த இந்து, சனவரி 26, 2007
  4. Anupama Subramanian (20 July 2013 Vasanth Balan’s period film is about evolution of drama பரணிடப்பட்டது 2014-07-14 at the வந்தவழி இயந்திரம். Deccan Chronicle. Retrieved 13 July 2014.
  5. https://www.google.com/search?q=seven+dollar+convent+trichy&tbm=isch&source=univ&sa=X&ved=2ahUKEwj8l87v8-HmAhX2zzgGHTilArsQ7Al6BAgKECQ
  6. Olympia Shilpa Gerald (17 July 2010). "Taking sanitation to slums". தி இந்து (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 21 ஜூலை 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100721032216/http://www.hindu.com/2010/07/17/stories/2010071761390200.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கிலியாண்டபுரம்&oldid=4041865" இலிருந்து மீள்விக்கப்பட்டது