சங்கானைக்கு என் வணக்கம்
Appearance
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
சங்கானைக்கு என் வணக்கம் என்பது யாழ்ப்பாணத்தில் சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்று இருந்த 1960களின் கால கட்டத்தில் சங்கானையில் நடந்த ஒரு சம்பவத்தை முன்வைத்து பாடப்பட்ட கவிதை ஆகும். இக்கவிதை அப்போராட்டத்தில் கலந்து கொண்ட கவிஞர் சுபத்திரனால் எழுதப்பட்டது. இலங்கையில் மிகவும் அறியப்பெற்ற கவிதைகளில் இதுவும் ஒன்று. குறிப்பிடத்தக்க சமூகத் தாக்கத்தை இக் கவிதை எழுப்பியது.
அக் கவிதையில் பின்வரும் கவிதை வரிகள் பல இடங்களில் குறிக்கப்படும் கவிதை வரிகள் ஆகும்:
- எச்சாமம் வந்து எதிரிஅழைத்தாலும் நிச்சாமக்கண்கள் நெருப்பெறிந்து
- நீறாக்கும் குச்சுக் குடிலுக்குள் கொலுவிருக்கும் கோபத்தை மெச்சுகிறேன்
- சங்கானை. மண்ணுள் மலர்ந்த மற்றவியட்நாமே உன் குச்சுக்குடிலுக்குள்
- குடியிருந்தகோபத்தை மெச்சுகிறேன் மெச்சுகிறேன்