சங்கர நாராயண சிவலிங்கேசுவரர் ஆலயம்
Jump to navigation
Jump to search
சங்கர நாராயண சிவலிங்கேஸ்வரர் ஆலயம் கிளிநொச்சி முரசுமோட்டை பிரதேசசபைப் பிரிவில் பரந்தன் முல்லைத்தீவு (A30) வீதியில் அமைந்துள்ளது. பல்நெடுங்காலமாக புற்றில் தோன்றிய இறைவனை பின்னர் சூலம் ஒன்று அமைத்து ஆலயம் அமைத்துப் பூசித்து வந்தனர். இது 1998 இல் இடம்பெற்ற உள்ளூர்ப் பிரச்சினைகளால் சேதமடைந்ததுடன் மக்களும் அப்பிரதேசத்தை விட்டு இடம் பெயர்ந்தனர். மீண்டும் 13 ஜூலை 2005 இல் அடிக்கல் நாட்டி புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப் பட்டன. இந்த ஆலயத்தில் கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மடம் ஆத்மகாந்தஜீ சுவாமிகள் பூசை செய்த விக்கிரகம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது.
உசாத்துணை[தொகு]
- ஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்திய நாதன்