சங்கர நமச்சிவாயர்
Jump to navigation
Jump to search
சங்கர நமச்சிவாயர் நன்னூலுக்கு, மயிலைநாதருக்குப் பின் உரை எழுதியவர். இவர் பதினோழாம் நூற்றாண்டில் திருநெல்வேலியில் தடிவீரையன் கோயில் தெருவில் வாழ்ந்தவர். சைவ வேளாளர் குடியில் தோன்றியவர். அக்காலத்தில் இவரைச் சங்கர நமச்சிவாயப்பிள்ளை என்றும், சங்கர நமச்சிவாயப்புலவர் என்றும் வழங்கி வந்தனர். இவரது ஆசிரியர், நெல்லை ஈசான மடத்திலிருந்த இலக்கணக்கொத்தின் ஆசிரியராகிய சாமிநாத தேசிகர். சங்கர நமச்சிவாயர் நன்னூலுக்கு உரை இயற்றக் காரணமாய் இருந்தவர், ஊற்றுமலை சமீன்தாராகிய மருதப்ப தேவர்.