சங்கர சங்கிதை
Appearance
சங்கர சங்கிதை என்பது வடமொழிப் புராண நூல்களில் ஒன்று. இதில் சிவரகசிய காண்டம் என்பது ஒரு பகுதி. இந்தப் பகுதி 7 காண்டங்களாக உள்ளது. இது 13000 கிரந்தங்களைக் [1] கொண்டது. இந்த 7-ல் முதல் 6 காண்டங்களில் உள்ள செய்திகள் கந்த புராணம் என்னும் பெயரில் தமிழில் பாடப்பட்டுள்ளன. இந்த நூல் கம்பராமாயணம் போலக் கதையை மட்டுமே தழுவிக்கொண்டுள்ளது. நூல் தமிழ்க் காப்பியமாக முதல்நூல் போல் பாடப்பட்டுள்ளது. இதில் 13221 பாடல்கள் உள்ளன. [2] ஏழாவது காண்டம் உபதேச காண்டம் என்னும் பெயரில் இருவேறு புலவர்களால் இருவேறு நூல்களாகச் செய்யப்பட்டுள்ளன.
கருவிநூல்
[தொகு]- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005