சங்கர கௌரீசுவரர் கோயில்

ஆள்கூறுகள்: 34°06′04″N 74°33′43″E / 34.101°N 74.562°E / 34.101; 74.562
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கர கௌரீசுவரர் கோயில்
சங்கர கௌரீசுவரர் கோயில்
சங்கர கௌரீசுவரர் கோயில் is located in ஜம்மு காஷ்மீர்
சங்கர கௌரீசுவரர் கோயில்
ஜம்மு காஷ்மீரில் கோயிலின் அமைவிடம்
சங்கர கௌரீசுவரர் கோயில் is located in இந்தியா
சங்கர கௌரீசுவரர் கோயில்
சங்கர கௌரீசுவரர் கோயில் (இந்தியா)
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஜம்மு காஷ்மீர்
அமைவு:பதான் (ஜம்மு காஷ்மீர்), பாரமுல்லா
ஆள்கூறுகள்:34°06′04″N 74°33′43″E / 34.101°N 74.562°E / 34.101; 74.562
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:காஷ்மீரக் கட்டிடக்கலை
வரலாறு
அமைத்தவர்:சங்கரவர்மன்

சங்கரகௌரீசுவரர் கோயில் (Shankaragaurishvara Temple) என்பது இந்துக் கடவுளான சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஓர் இந்துக் கோயிலாகும். இது இந்தியாவின் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியிலுள்ள பாரமுல்லாவுக்கு அருகிலுள்ள பதான் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

பொ.ச.883-க்கும் 902-க்கும் இடையில் ஆண்ட காஷ்மீரின் சங்கரவர்மன் என்பவரால் இந்த கோவில் கட்டப்பட்டது.[1] கோவில் சிதிலமடைந்த நிலையில், பூசைகள் நடத்தப்படுவதில்லை. இது சங்கராச்சாரியார் கோயிலைப் போன்ற பாணியில் கட்டப்பட்டுள்ளது.[2] ஜம்மு -காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் 15க்கும் மேற்பட்ட முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது.[3]

வரலாறு[தொகு]

உத்பால வம்சத்தை நிறுவிய அவந்திவர்மன் இறந்த பின்னர் அவரது மகன் சங்கரவர்மன் பொ.ச.883 இல் ஆட்சிக்கு வந்தார். இவரது காலத்தில் இக்கோயில் (883 – 902) என்பவரால் கட்டப்பட்டது.[4][5] ஜம்மு மற்றும் காஷ்மீரின் தலைநகராக இருந்த சிறீநகர் நகரத்திலிருந்து 27 கிலோமீட்டர்கள் (17 மைல்) தொலைவிலுள்ள சங்கரபட்டனம் (இன்றைய பதான்) என்று அழைக்கப்படும் தனது தலைநகரில் அவர் கோயிலைக் கட்டினார். அவர் கோயிலை சிவபெருமானுக்கு அர்ப்பணித்தார். இந்தக் கோயிலைத் தவிர, அவர் தனது மனைவியின் நினைவாக, கோயிலுக்கு அடுத்ததாக மற்றொரு கோயிலையும் கட்டி, அதற்கு சுகந்தீசர் கோயில் என்று பெயரிட்டார். இதுவும் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அதே திட்டத்தில் மேலும் சிக்கலான வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டது. ஆனால் இது மிகவும் சிறிய அளவில் உள்ளது. தற்போது இரண்டு கோவில்களும் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகின்றன.[1][5][6]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Burke, John (1868). "Shankaragaurishvara Temple at Patan, on the road between Srinagar and Baramula: view of the front or west face". Online gallery British Library.
  2. "Temples of Jammu & Kashmir". Shankaragaurishvara temple. Kamakoto organization.
  3. "Application Of Promotion Tools In Hospitality And Tourism Industry and Its Role in Developing the Jammu and Kashmir as a Tourist Destination". Journal of Tourism Studies and Research in Tourism. p. 39.
  4. Sailendra Nath Sen (1 January 1999). Ancient Indian History and Civilization. New Age International. பக். 295–96. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-224-1198-0. https://books.google.com/books?id=Wk4_ICH_g1EC&pg=PA295. 
  5. 5.0 5.1 Bhanwarlal Nathuram Luniya (1978). Life and culture in medieval India. Kamal Prakashan. பக். 516. https://books.google.com/books?id=2wFuAAAAMAAJ. 
  6. Manohar Kaul (1971). Kashmir: Hindu, Buddhist & Muslim architecture. Sagar Publications. பக். 85. https://books.google.com/books?id=_WBXAAAAMAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர_கௌரீசுவரர்_கோயில்&oldid=3400495" இலிருந்து மீள்விக்கப்பட்டது