சங்கர் மாவட்டம்
சங்கர் மாவட்டம்
ضلع سانگھڑ سانگهڙ ضلعو | |
|---|---|
மேல்:சாதாத்பூர் பள்ளிவாசல் | |
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சங்கர் மாவட்டத்தின் அமைவிடம் | |
| நாடு | பாகிஸ்தான் |
| மாகாணம் | சிந்து மாகாணம் |
| கோட்டம் | சாகித் பெனாசீராபாத் கோட்டம் |
| தொகுதி | சங்கர் நகரம் |
| அரசு | |
| • வகை | மாவட்டம் (நிர்வாகி-துணை ஆணையாளர்) |
| பரப்பளவு | |
| • நகரம் | 10,728 km2 (4,142 sq mi) |
| மக்கள்தொகை (2023) | |
| • நகரம் | 23,08,465 |
| • அடர்த்தி | 220/km2 (560/sq mi) |
| • நகர்ப்புறம் | 6,30,782 (27.32%) |
| • நாட்டுப்புறம் | 16,77,683 (72.68%) |
| எழுத்தறிவு | |
| • எழுத்தறிவு % |
|
| நேர வலயம் | ஒசநே+5 (PST) |
| வருவாய் வட்டங்கள் | 6 |
சங்கர் மாவட்டம் (Sanghar District), பாக்கித்தான் நாட்டின் தெற்கில் உள்ள சிந்து மாகாணத்தின் 30 மாவட்டங்களில் ஒன்றாகும். சிந்து மாகாணத்தின் நடுவில் அமைந்த சாகித் பெனாசீராபாத் கோட்டத்தில் இம்மாவட்டம் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சங்கர் நகரம் ஆகும். சங்கர் நகரமானது, சிந்து மாகாணத் தலைநகரான கராச்சிக்கு தென்மேற்கே 260 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 1,196.5 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் கிழக்கில் இந்தியா உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]இம்மாவட்டம் 6 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.[2] மேலும் இம்மாவட்டம் 4 நகராட்சிகளையும், 11 பேரூராட்சிகளையும், 70 ஒன்றியக் குழுக்களையும், கொண்டுள்ளது.[3]
- ஜாம் நவாஸ் அலி வட்டம்
- கிப்ரோ வட்டம்
- சஙகர் வட்டம்
- சாதாத்பூர் வட்டம்
- சின்ச்ஹோரோ வட்டம்
- தண்டோ ஆதாம் கான் வட்ட ம்
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 406,937 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 2,308,465 ஆகும்.[4]. பாலின விகிதம் 100 பெண்களுக்கு 103.25 ஆண்கள் வீதம் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 43.66% ஆகும்[5][6]. இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 734,122 (31.81%) ஆக உள்ளனர்.[7]நகர்புறங்களில் 630,782 (27.32%) மக்கள் வாழ்கின்றனர்.[5]
சமயம்
[தொகு]இம்மாவட்ட மக்கள் தொகையில் இசுலாம் சமயத்தை 74.95% மக்களும், இந்து சமயத்தை 24.47% மக்களும், கிறித்துவத்தை 0.42% மக்களும் மற்றும் பிற சிறுபான்மைச் சமயங்களை 0.16% மக்களும் பின்பற்றுகின்றனர்.
மொழி
[தொகு]இம்மாவட்ட மக்கள் தொகையில் சிந்தி மொழியை 76.13 % மக்களும், உருது மொழியை 8.69% மக்களும், பஞ்சாபி மொழியை 5.38% மக்களும், பலூச்சி மொழியை 2.05% மக்களும், இந்த்கோ மொழியை 1.57% மக்களும், பிராகுயி மொழியை 1.41% மக்களும், சராய்கி மொழியை 1.43% மக்களும், பஷ்தூ மொழியை 0.94% மக்களும் மற்றும் பிற மொழிகளை 2.39 % மக்களும் பேசுகின்றனர்[8]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023, SINDH" (PDF).
- ↑ District Government – Sanghar பரணிடப்பட்டது 2007-09-15 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Sanghar Local Government Election 2015 Result". www.electionpakistani.com. Retrieved 2022-02-01.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 20" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ 5.0 5.1 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 5" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 11" (PDF). Pakistan Bureau of Statistics.