சங்கர்லால் பேங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சங்கர்லால் கேலாபாய் பேங்கர் (Shankarlal Ghelabhai Banker ) (1889 - 1985) [1] இவர் ஓர் இந்திய சுதந்திர ஆர்வலராவார். மகாத்மா காந்தியின் ஆரம்பகால கூட்டாளிகளில் இவரும் ஒருவர்.

தொழில்[தொகு]

சங்கர்லால் மற்றும் இவரது நண்பர் இந்துலால் யாக்னிக் ஆகிய இருவரும் முறையே யங் இந்தியா மற்றும் நவஜீவன் என்ற வெளியீடுகளை நிறுவியிருந்தனர். மகாத்மா காந்தி இந்தியாவில் பொது வாழ்க்கையில் நுழைந்தபோது இவர்கள் இந்த வெளியீடுகளை ஒப்படைத்தனர். இவர் காந்தியின் ஆரம்பகால கூட்டாளிகளில் ஒருவராவார். [1] 1922 மார்ச் 10, அன்று, சங்கர்லால் பேங்கரும், யங் இந்தியாவின் வெளியீட்டாளராகவும் ஆசிரியராகவும் இருந்த காந்தியும் தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். [2]

அகமதாபாத்தில் காந்தியின் நடவடிக்கைகளில் பேங்கர் முக்கிய பங்கு வகித்தார். அகமதாபாத்தில் துணி ஆலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், 1918 கேதா சத்தியாக்கிரகம் மற்றும் ரௌலட் சட்டத்திற்கு எதிரான ஒத்துழையாமை போராட்டம் போன்றவற்றில் பங்கேற்றார். காதி மற்றும் நூற்புச் சக்கரத்தை ஊக்குவித்த பாரதிய நூற்புச் சங்கத்தின் செயலாளராகவும் இருந்தார். [1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Kothari, Urvish (2018-10-02). "How an engineer and 2 high-flyers became Gandhi's men". The Print.
  2. "TRIAL OF MAHATMA GANDHI - 1922". Bombay High Court.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர்லால்_பேங்கர்&oldid=3447197" இருந்து மீள்விக்கப்பட்டது