சங்கமருவிய காலத்தமிழில் பெயர்ப்பதிலிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சங்கம் மருவிய காலத்தமிழ்

திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை சங்க காலத்தை அடுத்து தோன்றியதால் அவை சங்க மருவிய கால நூல்களாகும். எட்டுத்தொகையைச் சார்ந்த பாரிபாடலும், கலித்தொகையும் சங்க இலக்கியத்திலிருந்து வேறுபட்டுள்ளன. எல்.வி.இராம சாமி ஐயர், வையாபுரிப்பிள்ளை, தெ.பொ.மீ., கமில் செவலபில் போன்ற பலரும் இதேக் கருத்தைக் கொள்கின்றனர். ச. அகத்தியலிங்கம் அவர்கள் சங்கத்தமிழ் என்ற நூலில் பின்பழந்தமிழ் கூறுகள் உள்ளதால் இரு நூல்களையும் சங்க மருவிய கால நூல்கள் என்கிறார். டாக்டர் ச.சுப.மாணிக்கம், ச.அகத்தியலிங்கம் போன்றவர்களும் இதே கருத்தைக் கொண்டுள்ளனர்.

பெயர்ப்பதிலிகள்

தன்மை, ஒருமை

இடப்பெயர் வடிவமான யான் என்பது நான் என வந்துள்ளது. இதனை பரிபாடல்தான் முதலில் கூறுகிறது.

முன்னிலைப் பெயர்கள்

நீர், உமக்கு என்னும் முன்னிலைப் பெயர்களும் பரிபாடலில் உள்ளன. முன்னிலை இடப்பெயர் வேற்றுமையை ஏற்கும்போது சிலப்பதிகாரத்தில் நகர மெய் கெட்டு வருகின்றது. நும் - உம், உமக்கு, நின் - உன் (சிலம்பு) அஞ்சல் உன்தன் அருந்துயர் களைகேன் - சிலம்பு உம்பிறப்பு ஈங்கிஃது - மேகலை மணிமேகலையில் உன் முப்பது இடங்களிலும், உம் ஓரிடத்திலும் வந்துள்ளது.

தான், தாம், தன், தம்

தான், தாம் என்பதும் அதன் குறுக்கங்களான தன், தம் என்பதும் பெயருக்கும் வேற்றுமைக்கும் இடையே சிலப்பதிகாரத்தில் வந்துள்ளன. ஒருமைப் பெயரை அடுத்து தான் என்பதும், பன்மைப் பெயரை அடுத்து தாம் என்பதும் வந்துள்ளன. எடுத்துக்காட்டு ‘கோவலன் தான் போன பின்னர்’ ‘மதுரையார் எல்லாம் தாம் மயங்கி’

பதிலிடு பெயர்களில் இரட்டைப் பன்மை

இரட்டைப் பன்மை விகுதியாக வந்த கள் விகுதிகள் பின்னர்ப் பதிலிடு பெயர்களிலும் ஆண்பால், பெண்பால் பெயர்களிலும் வரத் தொடங்கின.

சுட்டுப் பெயரடைகள்

அகர இகர சுட்டே சங்க வழக்காகும். அந்த இந்த என்பது சங்க மருவிய கால வழக்காகும். ‘அந்த வாணுதல்’ ‘இந்த ஈமப்புறங்காடு’

முடிவுரை

சங்க மருவிய காலத் தமிழில் சில புதியக் கூறுகள் பெற்றிருப்பினும் முழுக்க சங்கத்தமிழ் சாயலையே பெற்றுள்ளன. சில மாற்றங்கள் பிறமொழி செல்வாக்கினால் உருவானவை எனலாம்.

[1]

  1. சங்கத்தமிழ். ச. அகத்தியலிங்கம்