சங்கமம் அறக்கட்டளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இயங்கி வரும் மிகப் பழமைவாய்ந்த பள்ளியான "ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி"யின் முன்னாள் மாணவர்கள் சார்பில் நடத்தப்படும் அமைப்பு "சங்கமம் அறக்கட்டளை" ஆகும்.

2014ஆம் ஆண்டு மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாளான டிசம்பர் 11ஆம் நாள் அன்று அரசு பதிவு செய்யப்பட்டு செவ்வனே இயங்கி வருகிறது.[1] நூற்றைம்பதிற்கும் மேற்பட்டோர் இதன் உறுப்பினராய் இருந்து வருகின்றனர்.[2]

இப்பள்ளியின் மாணவ மாணவிகளின் கல்வி, விளையாட்டு மற்றும் பிற திறன்களுக்கு ஊக்கம் அளிக்கும் நோக்கில் பொது விழாக்களில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி அவர்கள் மேலும் உயர்ந்திட சங்கமம் அறக்கட்டளையானது திறம்பட செயல்பட்டு வருகிறது.[3]

2022 ஆகஸ்ட் 20 அன்று சங்கமம் அறக்கட்டளையின் சார்பாக ஒ.வெ.செ பள்ளி வளாகத்தில் பள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. பள்ளி நூற்றாண்டு மலரை சங்கமம் அறக்கட்டளை நிர்வாகிகள் வெளியிட தமிழக பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் பெற்றுக்கொண்டார்.[4]

பிற இணைப்புகள்[தொகு]

சங்கமம் அறக்கட்டளை - https://sangamamarakkattalai.life

மேற்கோள்[தொகு]

  1. பதிவு எண்: 033/2014 , PAN: AAYTS6837M
  2. "ஒ வெ செ பள்ளி - தினமலர்". தினமலர்.
  3. "பரிசளிப்பு விழா- தினமலர்". தினமலர்.
  4. "தினமலர்". சிவகங்கை மாவட்டம். 22-08-2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கமம்_அறக்கட்டளை&oldid=3523918" இருந்து மீள்விக்கப்பட்டது