சங்கப்புலவர் பாடல் தொகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சங்க காலப் புலவர்களால் பாடப்பட்ட எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய நூல்களில் கிடைத்துள்ள பாடல்கள் 2381. இவற்றில் பாடியவரின் பெயர் தெரிந்த பாடல்கள் 2279. இவற்றைப் பாடிய புலவர்கள் 473 பேர். இவர்களில் அதிக பாடல்கள் பாடிய புலவர்களின் வரிசை இவ்வாறு அமைகிறது.

100 பாடல்களுக்கு மேல் பாடிய புலவர்கள்
235 கபிலர் (ஐங்குறுநூறு 100, குறிஞ்சிப்பாட்டு 1, கலித்தொகை 28 பாடல்கள் உட்பட)
127 அம்மூவனார் (ஐங்குறுநூறு 100 உட்பட)
110 ஓரம்போகியார் (ஐங்குறுநூறு 100 உட்பட)
104 பேயனார் (ஐங்குறுநூறு 100 உட்பட)
103 ஓதலாந்தையார் (ஐங்குறுநூறு 100 உட்பட)
50 பாடல்களுக்கு மேல் பாடிய புலவர்கள்
85 பரணர்
79 மருதனிள நாகனார் (கலித்தொகையில் 35 பாடல்கள் உட்பட)
68 பாலை பாடிய பெருங்கடுங்கோ (கலித்தொகையில் 35 பாடல்கள் உட்பட)
59 ஔவையார்
20 பாடல்களுக்கு மேல் பாடியபுலவர்கள்
40 நல்லந்துவனார் (கலித்தொகையில் 33, பரிபாடலில் 4 உட்பட)
37 நக்கீரர்
35 உலோச்சனார்
30 மாமூலனார்
23 கயமனார்
21 பெருங்குன்றூர் கிழார்
20 பேரிசாத்தனார்

பிறரது பாடல்கள் 20 இற்குக் குறைவாகவே உள்ளன.

கருவிநூல்[தொகு]

  • சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்), எஸ். வையாபுரிப்பிள்ளை இரண்டாம் பதிப்பு, 1967.