சங்கனகௌடா பசனகௌடா பாட்டீல்
சங்கனகௌடா பசனகௌடா பாட்டீல் (Sanganagouda Basanagouda Patil) என்பவர் இந்தியாவின் கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1925 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். அப்போதைய மைசூர் மாநிலத்தில் உள்ள பிச்சாப்பூர் தெற்குத் தொகுதியின் மக்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]பிச்சாப்பூர் மாவட்டத்திலுள்ள சுனாக்கு கிராமத்தில் இவர் பிறந்தார். ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக அறியப்படுகிறார். 1962-ஆம் ஆண்டில் பாகல்கோட்டு மக்களவைத் தொகுதியிலிருந்து முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
தொழில்
[தொகு]அப்போதைய மைசூர் மாநிலத்தில், 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பிச்சாப்பூர் தெற்குத் தொகுதியில் வெற்றிபெற்று, பாட்டீல் 3-ஆவது மக்களவையின் உறுப்பினரானார். கருநாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட்டு தொகுதியிலிருந்து, இவர் 4-ஆவது, 5-ஆவது மற்றும் 6-ஆவது மக்களவைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2][3]கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் தொகுதியிலிருந்து 4-வது, 5-வது மற்றும் 6-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் .[4][5]
சங்கனகௌடா பசனகௌடா பாட்டீல் 2001 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று பாகல்கோட்டில் தனது 76-ஆவது வயதில் காலமானார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Jamkhandi Constituency Election Results: Assembly seat details, MLAs, candidates & more". The Times of India. 2023-05-13. https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/karnataka/constituency/jamkhandi-assembly-constituency-election-results-assembly-seat-details-mlas-candidates/articleshow/99690970.cms.
- ↑ "🗳️ Sanganagouda Basanagouda Patil, Bijapur South Lok Sabha Elections 1962 in India LIVE Results | Latest News, Articles & Statistics". LatestLY (in ஆங்கிலம்). Retrieved 2024-08-25.
- ↑ "Lok Sabha debates" (PDF). Archived from the original (PDF) on 2025-01-27.
- ↑ "Lok Sabha Members Bioprofile-". Retrieved 13 December 2017.
- ↑ "IndiaVotes PC: Karnataka 1977". IndiaVotes. Retrieved 2024-08-25.
- ↑ Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 2002. p. 1. Retrieved 12 March 2023.