சங்ககால மூவேந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூவேந்தர் என்போர் சேர சோழ பாண்டியர். சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட சேர சோழ பாண்டியர்களின் பெயர்களைப் புறநானூற்றையும் [1] [2] பத்துப்பாட்டையும் தொகுத்தவர்களும், பதிற்றுப்பத்தைத் [3] தொகுத்துப் பதிகம் பாடியவரும் குறிப்பிடுகின்றனர். பாடல்களுக்குள்ளேயும் இவர்களின் பெயர்கள் வருகின்றன. அரசர்களின் பெயர்களில் உள்ள அடைமொழிகளை ஓரளவு பின் தள்ளி அகரவரிசையில் தொகுத்து வரலாற்றுக் குறிப்பு தரப்பட்டுள்ளது. இது வரலாற்றினை ஒப்புநோக்கி அறிய உதவியாக இருக்கும்

  • மூவேந்தரும் ஒன்றுகூடிப் பறம்புமலையை முற்றுகையிட்டுப் பாரியை வீழ்த்தினர். [4]
  • மூவர் நட்பு, இருவர் நட்பு பற்றிய செய்திகளை அவரவர் வரலாற்றில் காணலாம்

மூவேந்தர்[தொகு]

மூவேந்தர் ஒருங்கிணைப்புப் பார்வை[தொகு]

சேரர்[தொகு]

அரசன் பெயர் அடையுடன் கூடிய பெயர் தலைநகர் பதிற்றுப்பத்தின் தலைவன் சிறுகுறிப்பு
அந்துவஞ்சேரல் சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை கருவூர் - சோழனை மதயானைப் பிடியிலிருந்து காப்பாற்றியவன்
உதியஞ்சேரல் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் வஞ்சி முதல் பதிற்றுப்பத்து தலைவன் எனக் கருதுவர் ஐவர்-நூற்றுவர் போரிர் பெருஞ்சோறு அளித்தவன்
கருங்கோ வாழியாதன் செல்வக் கடுங்கோ வாழியாதன், சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன், சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன் கருவூர் ஏழாம் பத்து பூழியர் பெருமகன், புகழூர்க் கல்வெட்டு
குட்டுவன் (செங்குட்டுவன்) சேரன் செங்குட்டுவன் , சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன், கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் வஞ்சி ஐந்தாம் பத்து கடற்போர் வெற்றி, கண்ணகிகுச் சிலை
குட்டுவன் (பல்யானை) பல்யானைச் செல்கெழு குட்டுவன் வஞ்சி மூன்றாம் பத்து அகப்பா வெற்றி
குட்டுவன் கோதை - வஞ்சி - வள்ளல்
குடக்கோச் சேரல் சேரமான் குடக்கோச் சேரல், குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை கருவூர் ஒன்பதாம் பத்து கருவூரில் இருந்துகொண்டு குடநாட்டையும் ஆண்டவன்
கோதை மார்பன் - தொண்டி - சோழன் பாண்டியன் வென்றதற்கு மகிழ்ந்தவன், வள்ளல்
சேரல் (நார்முடி) களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் வஞ்சி நான்காம் பத்து பூழி நாட்டை வென்றான், நன்ன்னை வென்றான்
சேரலாதன் (ஆடுகோள்) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தொண்டி ஆறாம் பத்து மழவரை வென்றான்
நெடுஞ்சேரலாதன் (இமயவரம்பன்) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் வஞ்சி இரண்டாம் பத்து ஆரியரை வணக்கினான், யவனரைப் பிணித்தான்
நெடுஞ்சேரலாதன் (குடக்கோ) சேரமான் குடக்க்கோ நெடுஞ்சேரலாதன் வஞ்சி - சோழனோடு போரிட்டபோது இருவரும் மாண்டனர்
பெருங்கடுங்கோ பாலை பாடிய பெருங்கடுங்கோ கருவூர் - அரசன், புலவன்
பெருஞ்சேரல் இரும்பொறை சேரமான் கருவூர் எறிய ஒள்வாள் கோப் பெருஞ்சேரல் இரும்பொறை கருவூர் எட்டாம் பத்து தகடூர் யாத்திரை நூலின் தலைவன், புலவர்க்குக் கவரி வீசியவன்
பெருஞ்சேரலாதன் சேரமான் பெருஞ்சேரலாதன் வஞ்சி - கரிகாலனோடு வெண்ணியில் போர், வடக்கிருத்தல்
மாந்தரஞ்சேரல் சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சேரமான் யானைக்கண் சேய் மாந்தஞ்சேரல் இரும்பொறை, கோச் சேரமான் யானைக்கண் சேய் மாந்தஞ்சேரல் இரும்பொறை கருவூர் பத்தாம் பத்தின் தலைவன் எனக் கருதப்படுகிறான் கொல்லிநாட்டை வென்றான், சோழனிடம் தோற்றான், தொண்டிப் புரட்சியை அடக்கினான்
மாரி வெண்கோ - வஞ்சி - மூவேந்தர் நட்பு
வஞ்சன் சேரமான் வஞ்சன் பாயல் நாடு - வள்ளல்

சோழர்[தொகு]

பாண்டியர்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. உ. வே. சாமியாதையர் ஆராய்ச்சி குறிப்புடன் ((முதல் பதிப்பு 1894) ஐந்தாம் பதிப்பு 1956). புறநானூறு மூலமும் உரையும். சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு. பக். முன்னுரை, பாடப்பட்டோர் வரலாறு பக்கம் 62 முதல் 82. 
  2. சு. வையாபுரிப் பிள்ளை அறிஞர் கழகம் ஆராய்ந்து வழங்கியது ((முதல் பதிப்பு 1940) இரண்டாம் பதிப்பு 1967). சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்). சென்னை - 1: பாரி நிலையம்,. பக். அரசர் முதலியோரும், அவர்களைப் பாடியோரும், பக்கம் 1461 முதலை 1485. 
  3. உ. வே. சாமியாதையர் அரும்பத அகராதி முதலியவற்றுடன் (இரண்டாம் பதிப்பு 1920). பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும். சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, சுப்பிரமணிய தேசிகர் பொருளுதவி. 
  4. புறநானூறு 110
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்ககால_மூவேந்தர்&oldid=1439373" இலிருந்து மீள்விக்கப்பட்டது