சங்ககால மருத்துவ மனைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சங்ககாலத்தில் மருத்துவம் செய்துகொள்ளும் ஊர்கள் சில இருந்தன. சங்ககால அரசர்கள் பலர் அந்த இடங்களில் இருந்து உயிர் நீத்திருக்கிறார்கள். துஞ்சினார் என்றால் வருஞ்சாவு வந்து உயிர் நீத்தார் என்பது பொருள். அவ்வூர்களில் இருந்த மருத்துவர்கள் யார் எனத் தெரியவில்லை. [1] அரசன் மருத்துவம் செய்யப்படாமல் உயிர் நீத்தான் என்று கொள்வதற்கில்லை. எனவே அரசன் உயிர் நீத்த ஊர் மருத்துவ மனை இருந்த ஊர்.

  • 'பள்ளி' என்னும் சொல் இந்தச் சொல்லாட்சிகளில் மருத்துவக் கல்விக்கூடங்களைக் குறிக்கும்.

இலவந்திகைப்பள்ளி

சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி, பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன் ஆகியோர் உயிர் நீத்த இடம்.

குராப்பள்ளி

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் ஆகியோர் உயிர் நீத்த இடம்.

குளமுற்றம்

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் உயிர் நீத்த இடம்.

கூடகாரம்

பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி உயிர் நீத்த இடம்.

கோட்டம்பலம்

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை உயிர் நீத்த இடம்.

சிக்கற்பள்ளி

சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் உயிர் நீத்த இடம்.

சித்திரமாடம்

பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் உயிர் நீத்த இடம்.

வெள்ளியம்பலம்

பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி உயிர் நீத்த இடம்.

அடிக்குறிப்பு[தொகு]