சங்ககாலத்தில் பகை நாட்டினர் நிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சங்ககாலத்தில் பகை நாட்டினர் நிலை

சங்க கால அரசுகள் வெற்றி கொண்ட பகுதிகளில் பல சீரழிவுகளை மேற்கொண்டதாகச் சங்க இலக்கியங்களில் பதிவுகள் உள்ளன.

இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளி

இம்மன்னன் தான் வெற்றி கொண்ட நாட்டின் நெல் வயல்களை அழித்து அவர் நாட்டிலுள்ள மரங்களை விறகாகக் கொண்டு வீடுகளை எரித்துச் சாம்பலாக்கியதோடு குடிநீரையும் யானைகளை விட்டுக் கலக்கிப் பாழாக்கினான் என்கிறது புறநானூறு(16).

பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி

இவன் தான் வென்ற நாட்டின் தேர் செல்லும் தெருக்களையும், ஊர்களையும் பாழாக்கி அரண்மனைகளை இடித்துப் பாழாக்கியதோடு அவர் வயல்களில் வெள்வாய்க் கழுதைகளைப் பூட்டி உழுதான். (புறநானூறு 15)

பொகுட்டெழினி

அதியமான் மகனான இவன் திறை தராத அரசுகளின் உயர் மதில்களை அழித்து அவர் வயல்களில் வெள்ளிய வாயினை உடைய கழுதையைப் பூட்டி உழுது வெள்ளை வரகும் கொள்ளும் விதைத்தான். (புறநானூறு 392)

இவ்வாறு வேற்று அரசுகளால் வெற்றி கொள்ளப்பட்ட நிலப்பகுதிகள் அடைந்த அழிவையும் அதன்கண் அந்நில மக்கள் அடைந்த இன்னல்களையும் பல சங்க இலக்கியப் பாடல்கள் கூறுகின்றன.

[1]

  1. தமிழ்நாட்டு வரலாறு - முனைவர் பொன்.தங்கமணி