சக்தி நகரம்
சக்தி | |
|---|---|
நகரம் | |
பேரி வாலி சக்தி கோயில் | |
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் சக்தி நகரத்தின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 22°02′N 82°58′E / 22.03°N 82.97°E | |
| நாடி | |
| மாநிலம் | சத்தீஸ்கர் |
| மாவட்டம் | சக்தி மாவட்டம் |
| பெயர்ச்சூட்டு | மகாமாயா கோயில் |
| அரசு | |
| • நிர்வாகம் | நகராட்சி |
| ஏற்றம் | 237 m (778 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 30,100 |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 495689 |
| வாகனப் பதிவு | CG-36 |
சக்தி நகரம் (Sakti), இந்தியாவின்சத்தீஸ்கர் மாநிலத்தின் சக்தி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். ராய்ப்பூருக்கு வடகிழக்கே 205.4 கிலோ மீட்டர் தொலைவிலும்; பிலாஸ்பூருக்கு 92.3 கிழக்கே கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 18 வார்டுகளும், 4,529 குடியிருப்புகளும் கொண்ட சக்தி நகரத்தின் மக்கள் தொகை 21,955 ஆகும். அதில் 11,111 ஆண்கள் மற்றும் 10,844 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 976 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு f 70.28 % வீதம் உள்ளது. மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆக 11.79 % வீதம் உள்ளனர் இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 13.82 % மற்றும் 5.44 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 94.66%, இசுலாமியர் 4.27%, சமணர்கள் , பௌத்தர்கள், கிறித்தவர்கள் 0.52%, சீக்கியர்கள் 0.41% மற்றும் பிற சமயத்தினர் 0.14% வீதம் உள்ளனர். [1]இந்நகரத்தில் வட்டார மொழியாக சத்திசுகரி மொழி பேசப்படுகிறது.
போக்குவரத்து
[தொகு]
ஹவுரா-நாக்பூர்-மும்பை இருப்புப்பாதையில் அமைந்த சக்தி தொடருந்து நிலையம், ராய்ப்பூர், பிலாஸ்பூர், புவனேஸ்வரம், ஹவுரா, மும்பை, நாக்பூர் போன்ற நகரங்களுக்குச் செல்லும் தொடருந்துகள் சக்தி இரயிவே நிலையத்தில் நின்று செல்கிறது.[2]
நெடுஞ்சாலைகள்
[தொகு]ராய்ப்பூர்-புவனேஸ்வரத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 200, சக்தி நகரம் வழியாகச் செல்கிறது.
தொழில்கள்
[தொகு]- சக்தி நகரத்தில் வேளாண்மைக்கு தேவையான டிரெய்லர் மற்றும் டிப்பர்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் கொண்டுள்ளது. சக்தி நகரத்தைச் சுற்றிய பகுதிகளில் டோலமைட்டு கனிமம் அதிக அளவில் வெட்டி எடுக்கப்படுகிறது.
கல்வி
[தொகு]
பள்ளிக்கூடங்கள்
- ஜிண்டால் வோர்ல்டு ஸ்கூல்
- சரஸ்வதி சிசு மந்திர் [3]
- அரசு மேனிலைப்பள்ளி
- எம். எல். ஜெயின் மேனிலைப்பள்ளி
- அரசு பி. எஸ். சர்வானி பள்ளிக்கூடம்
கல்லூரிகள்
- ஜெ. எல். என் கல்லூரி
- அரசு கிராந்தி பாரதிய கல்லூரி
- சி. வி. இராமன் கல்லூரி
மேற்கோள்கள்
[தொகு]மேலும் படிக்க
[தொகு]- Lethbridge, Roper (1893). The Golden Book of India. MacMillan & Co. p. 475.