சக்தி சுரபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சக்தி சுரபி என்பது ஒரு உயிரி மீத்தேனாக்க கலன் (Bio-methanation plant). இது அடிப்படையில் ஒரு சமையல் எரிவாயுகலன். இக்கலன் விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தி பிரிவால் வடிவமைக்கப்பட்டது. இவ்வடிவமைப்பு இந்திய அரசின் புத்தாக்க ஆற்றல் அமைச்சகத்தால் ஏற்கப்பட்டுள்ளது. இது காப்புரிமை பெற்ற வடிவமைப்பு ஆகும். இக்கலன் சமையல் எரிவாயுவை உற்பத்தி செய்யும் கலனாகும்.இதில் இடுபொருளாக பயன்படுத்தப்படுவது வீட்டில் உள்ள சமையல் கழிவுகளே ஆகும்.

இக்கலனை வீட்டில் நிறுவும் போது மட்டும் தொடக்கத்தில் மீத்தேன் உருவாக்க நுண்ணுயிரிகளை உருவாக்க சாண கரைசல் விட வேண்டும். அதன் பின்னர் வீட்டு சமையல் கழிவுகளை இதில் தொடர்ந்து இடலாம். இக்கலன் பல்வேறு கொள்ளளவுகளில் கிடைக்கிறது. ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு மாற்றி எடுத்து செல்லும் விதத்திலும் ஒரே இடத்தில் நிலையாக வைக்கப்படும் விதத்திலும் இக்கலன்களில் இருவகை வடிவமைப்புகள் உள்ளன.

இக்கலன் மூலம் சமையல் எரிவாயுவை பெறலாம். வீட்டில் உள்ள கழிவுகளை நீக்கி சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்திருக்கலாம். இக்கலனிலிருந்து வெளிவரும் எரிவாயுக் கழிவுநீர் சிறந்த தாவர ஊட்டச்சத்துக்களை கொண்டது. அதை நீர்க்க வைத்து வீட்டுத் தோட்டத்திலும் விவசாயத்திலும் இயற்கை உரமாக பயன்படுத்தலாம்.

வடிவமைப்பு[தொகு]

இக்கலனில் முக்கியமாக பின் வரும் பாகங்கள் உள்ளன: ஒரு உள்ளிடும் குழாய் உள்ளது. இக்குழாய் வாயு சேகரிப்பானிலிருந்து தொடங்கி கீழே செரிப்பான் வரை நீண்டிருக்கிறது. எனவே இது கழிவுகளை நன்றாக உடைக்கும் கம்பமாகவும் பயன்படுகிறது. இக்கலனில் ஒரு செரிப்பான் உள்ளது. அங்கு நுண்ணுயிரிகள் வீட்டுக் கழிவுகளை நொதிக்க வைத்து மீத்தேன் வாயுவை உருவாக்குகின்றன. அந்த வாயுவானது வாயு சேகரிப்பானில் சேகரிக்கப்பட்டு சமையலறைக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஒரு கன மீட்டர் கொள்ளளவு வாயு உற்பத்தி செய்ய தினமும் ஐந்து கிலோ கழிவுகளை இட வேண்டும். இக்கலன் வடிவமைப்பில் குறைவாக கழிவுகள் இடுவதால் அதன் செயல்திறன் பாதிப்படையாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே குறைவாக கழிவுகள் இருந்தால் கவலைப்பட தேவையில்லை. ஆனால் கழிவுகளில் நார்த்தன்மை கொண்ட பொருட்களோ அல்லது அமிலத்தன்மை அதிகம் கொண்ட பொருட்களோ மிகுதியாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் அது இக்கலனின் செயல்பாட்டை பாதிக்கும்.

இக்கலன் கிராமங்களிலும் நகர்ப்புறங்களிலும் பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் விவேகானந்த கேந்திரம் கன்னியாகுமரி, இந்த கழிவு எரிவாயு கலன் குறித்த ஒருநாள் அறிமுக பயிற்சி முகாமை ஆஞ்சநேயபுரம் தொழில்நுட்ப வள மையத்தில் நடத்துகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்தி_சுரபி&oldid=2745102" இருந்து மீள்விக்கப்பட்டது