உள்ளடக்கத்துக்குச் செல்

சக்திகாந்த தாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சக்திகாந்த தாஸ்
25 ஆவதுஇந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11  டிசம்பர் 2018
நியமிப்புநியமனத்திற்கான அமைச்சரவைக் குழு
குடியரசுத் தலைவர்ராம் நாத் கோவிந்த்
பிரதமர்நரேந்திர மோதி
Vice Presidentவெங்கையா நாயுடு
முன்னையவர்உர்சித் படேல்
ஜி-20 இந்தியாவிற்கான பிரதிநிதி
பதவியில் உள்ளார்
பதவியில்
27 நவம்பர் 2017
நியமிப்புநியமனத்திற்கான அமைச்சரவைக் குழு
பிரதமர்நரேந்திர மோதி
அமைச்சர்அருண் ஜெட்லி
ஆளுநர்உர்சித் படேல்
முன்னையவர்அரவிந்த் பனகாரியா
இந்திய ஐந்தாவது நிதி ஆணையத்தின உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
27 நவம்பர் 2017
நியமிப்புநியமனத்திற்கான அமைச்சரவைக் குழு
இந்தியப் பொருளாதாரச் செயலர்
பதவியில்
31 ஆகஸ்ட் 2015 – 28 மே 2017
நியமிப்புநியமனத்திற்கான அமைச்சரவைக் குழு
அமைச்சர்அருண் ஜெட்லி
முன்னையவர்இராசீவ் மகரிசி
பின்னவர்சுபாஷ் சந்திர கார்க்
வருவாய்த்துறைச் செயலர்
பதவியில்
16 ஜூன் 2014 – 31 ஆகஸ்ட் 2015
நியமிப்புநியமனத்திற்கான அமைச்சரவைக் குழு
முன்னையவர்ராஜிவ் தாக்கூர்
பின்னவர்ஹாஸ்முக் அதியா
உரத்துறைச் செயலர்
பதவியில்
30 டிசம்பர் 2013 – 15 ஜூன் 2014
நியமிப்புநியமனத்திற்கான அமைச்சரவைக் குழு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 பெப்ரவரி 1957 (1957-02-26) (அகவை 67)
ஒடிசா, இந்தியா
தேசியம்இந்தியா
முன்னாள் கல்லூரிபுனித ஸ்டீபன் கல்லூரி, தில்லி பல்கலைக்கழகம்
இந்திய மேலாண்மை கழகம் பெங்களூரு
இந்திய மேலாண்மை கழகம் கொல்கத்தா
இந்திய நிர்வாக அலுவலர் கல்லூரி
தேசிய வங்கி மேலாண்மைக் கல்லூரி
ஹிமாச்சல் பிரதேச பொது நிர்வாகக் கல்வி நிறுவனம்
வேலைஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி

சக்திகாந்த தாஸ், (பிறப்பு: 26 பெப்ரவரி 1957) இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் மற்றும் முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாவார். இந்திய ரிசர்வ் வங்கியின் 25 ஆவது ஆளுநராகத் தற்போதுள்ளார். இதற்கு முன்னர் இந்தியாவின் பதினைந்தாம் நிதி ஆணையத்தின் உறுப்பினராகவும், ஜி 20 இந்தியப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார். பொருளாதார விவகாரச் செயலாளர், வருவாய்த்துறைச் செயலாளர், உரத்துறைச் செயலாளர் உட்பட இந்திய ஆட்சிப் பணியில் மத்திய மற்றும் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்.

இளமையும் கல்வியும்

[தொகு]

இவர் ஒடிசா மாநிலத்தில் பிறந்தவரார். புவனேஷ்வர் நகரில் டிமான்ஸ்ட்ரேஷன் மல்டிபர்பஸ் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். புதுதில்லி புனித ஸ்டீபன் கல்லூரியில் இளநிலைப் பட்டம் மற்றும் முதுநிலைப் பட்டம் பெற்றார். இந்திய மேலாண்மை கழகத்தில் நவீனப் பொருளாதார நிர்வாகமும், இன்ஸ்டிட்யூட் பக்ளிக் என்டர்பிரைஸில் நிதி நிர்வாகத்தில் அலுவல்ரீதியான பயிற்சியும் பெற்றார். இந்திய நிர்வாக அலுவலர் கல்லூரியில் திட்ட மேலாண்மைப் படிப்பில் பட்டயம் பெற்றவர். மேலும் இந்திய மேலாண்மை கழகத்திலும் ஹிமாச்சல் பிரதேச பொது நிர்வாகக் கல்வி நிறுவனத்திலும் பயிற்சி பெற்றவராவார்[1][2]

பணிகள்

[தொகு]
இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் ரிச்சர்ட் வர்மாவுடன் வெளிநாட்டுக் கணக்கு வரி உடன்பாட்டுச் சட்டத்தில் (FATCA) கையெழுத்திடுகிறார்
அனைத்துலக நாணய நிதியத்தின் திறப்பு விழாவில்

2014 ஜூன் மாதம் நியமனத்திற்கான அமைச்சரவைக் குழுவின் பரிந்துரையில் வருவாய்த்துறை செயலாளரக ஆனார்.[3][4][5]

தொழில்துறைத் தலைமைச் செயலர், வருவாய்த்துறை சிறப்பு ஆணையர், வணிகவரித் துறை செயலர், ஏய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் குழுகத்தின் திட்ட இயக்குநர், திண்டுக்கல் மற்றும் காஞ்சிபுர மாவட்ட ஆட்சித் தலைவர் எனத் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்.[1] மற்றும் மத்தியப் பொருளாதார விவகாரச் செயலாளர், மத்திய வருவாய்த் துறைச் செயலாளர், நிதி அமைச்சகத்தின் சிறப்புச் செயலர் மற்றும் கூடுதல் செயலர் என இந்திய அரசின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றியவர்.[1]

2015 ஆகஸ்ட்டில் இவரைப் பொருளாதார விவகாரச் செயலாளராக நியமனத்திற்கான அமைச்சரவைக் குழு நியமித்தது.[6][7][8]

ரிசர்வ் வங்கி

[தொகு]

2018 டிசம்பரில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக மூன்றாண்டுகளுக்குப் பதிவியேற்றார்.[9][10][11]

மேற்கோள்கள்

[தொகு]
 1. 1.0 1.1 1.2 "Shaktikanta Das - Executive Record Sheet". Department of Personnel and Training, இந்திய அரசு. பார்க்கப்பட்ட நாள் January 15, 2018.
 2. "Odisha's Shaktikanta Das is new RBI Governor".
 3. "Shaktikanta Das appointed as Revenue Secretary". பிசினஸ் ஸ்டாண்டர்ட். புது தில்லி. June 16, 2014. பார்க்கப்பட்ட நாள் January 15, 2018.
 4. Sinha, Shishir (June 14, 2014). "Shaktikanta Das appointed as Revenue Secretary". பிசினஸ் லைன். புது தில்லி: தி இந்து குழுமம். பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-7528. இணையக் கணினி நூலக மைய எண் 456162874. பார்க்கப்பட்ட நாள் January 15, 2018.
 5. "Shaktikanta Das takes charge as revenue secretary". Livemint. புது தில்லி: HT Media Ltd. June 16, 2014. பார்க்கப்பட்ட நாள் January 15, 2018.
 6. "Shaktikanta Das appointed Economic Affairs Secretary; Hasmukh Adhia is new Revenue Secretary". தி எகனாமிக் டைம்ஸ். புது தில்லி. August 29, 2015. பார்க்கப்பட்ட நாள் January 15, 2018.
 7. "Das is new economic affairs secy, Hasmukh Adhia revenue secretary". இந்தியன் எக்சுபிரசு. புது தில்லி. Express News Service. August 29, 2015. இணையக் கணினி நூலக மைய எண் 70274541. பார்க்கப்பட்ட நாள் January 15, 2018.
 8. "Shaktikanta Das Takes Charge as Economic Affairs Secretary". என்டிடிவி. புது தில்லி. September 2, 2015. பார்க்கப்பட்ட நாள் January 15, 2018.
 9. Prasad, Gireesh Chandra (11 December 2018). "Shaktikanta Das appointed new RBI governor". மின்ட். புது தில்லி: Vivek Khanna. பார்க்கப்பட்ட நாள் 11 December 2018.
 10. "Shaktikanta Das Is New RBI Governor". BloombergQuint. BQ Desk. 11 December 2018. பார்க்கப்பட்ட நாள் 11 December 2018.{{cite web}}: CS1 maint: others (link)
 11. "Shaktikanta Das: The man behind GST, note ban now heads RBI". தி எகனாமிக் டைம்ஸ் (The Times Group). 11 December 2018. இணையக் கணினி நூலக மையம்:61311680. https://economictimes.indiatimes.com/industry/banking/finance/banking/shaktikanta-das-the-man-behind-gst-note-ban-now-heads-rbi/articleshow/67046113.cms. 

வெளியிணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்திகாந்த_தாஸ்&oldid=4041700" இலிருந்து மீள்விக்கப்பட்டது