சக்குபாய் ராமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சக்குபாய் ராமச்சந்திரன் என்பவர் இந்தியாவின் முதல் கால்நடை மருத்துவர். சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 1948 முதல் பெண்களையும் சேர்த்துக்கொள்ள ஆரம்பித்த்து. கேரளத்தைச் சேர்ந்த சக்குபாய் இக்கல்லூரியில் இளங்கலை கால்நடை மருத்துவப் படிப்பில் முதலில் சேர்ந்து 1952 இல் படிப்பை நிறைவு செய்து, இந்தியாவின் முதல் பெண் கால்நடை மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார். பின்னர் பல்வேறு முக்கிய நிறுவனங்களில் பணியாற்றிய அவர், பெங்களூர் இந்திய கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானியாக பணியாற்றி 1971-ல் ஒய்வு பெற்றார்.[1]

மேற்கோள்[தொகு]

  1. "முதல் கால்நடை மருத்துவர்". கட்டுரை. தி இந்து. 17 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 1 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)