சக்ராயுதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சக்கராயுதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
சக்ராயுதம் (எ) சுதர்சன சக்கரம்
சக்கராயுதம்.jpg
சக்கராயுதம்

இந்து தொன்மவியலின் அடிப்படியில் சக்ராயுதம் என்பது திருமாலின் ஆயுதங்களில் ஒன்றாகும். - [1] இந்த ஆயுதத்தினை சக்கரத்தாழ்வார் என வடிவமிட்டு வைணவர்கள் வணங்குகிறார்கள். சக்ராயுதத்தினை கால் பெருவிரலில் வரைந்து சிவபெருமான் உருவாக்கினார். அந்த ஆயுதத்தினைக் கொண்டு ஜலந்திரன் எனும் அரக்கனை சிவபெருமான் அழித்தார். திருமால் சக்ராயுதம் வேண்டி ஆயிரம் தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்தார். ஒரு நாள் தாமரைகளில் ஒன்று குறைந்ததைக் கண்டு, தன்னுடைய கண்களில் ஒன்றை தாமரைப்பூவிற்கு பதிலாக அளித்தார். அப்போது சிவபெருமான் சுதர்சன சக்ரத்தினை திருமாலுக்கு அளித்தார்.

சுதரிசனம்,சுதர்சனம் என பல பெயர்களில் இவ்வாயுதம் வழங்கப்படுகிறது.

சக்கரத்தினை தந்த சிவன்[தொகு]

சிவபெருமானை திருவீழிமிழலை தலத்தில் விஷ்ணு ஆயிரம் தாமரைப் பூக்களை கொண்டு தினம் அர்ச்சனை செய்து வந்தார். ஒருநாள் ஆயிரம் தாமரைப் பூக்களில் ஒன்று குறைந்தது காணப்பட்டது. அதனை அர்ச்சனையின் போது அறிந்த விஷ்ணு தன் கண்களில் ஒன்றினை தாமரையாக்கி ஆயிரம்பூவாக முழுமையான பூஜை செய்தார். அதனால் சிவபெருமான் மகிழ்ந்து சக்ராயுதத்தினை விஷ்ணுவிக்கு வழங்கினார் என்று திருவீழிமிழலை தலபுராணம் கூறுகிறது.

சக்ராயுத குணங்கள்[தொகு]

சக்ராயுதமானது ஒரு முறை ஏவினால் எவரைக் கொல்ல வேண்டும் என மனதில் நினைத்திருக்கிறோமோ அவரைக் கொல்லும் என்று நம்பப்படுகிறது. ஒரு முறை ஏவினால் கொன்றுவிட்டு மீண்டும் ஏவியவரிடமே வந்து சேரும் என்பதும் அதன் குணங்களாகும். இந்த ஆயுதத்தினை வளரியோடு ஒப்பிட்டு நோக்கலாம்.

விஷ்ணு புராணம் சக்ராயுதம் சூன்யப்பாதையில் செல்கிறது என்றும், திருமாலின் விரலிலிருந்து செல்லும் சக்ராயுதம், எதிரைகளை அழித்து மீண்டும் திருமாலின் கரங்களை வந்தடையும் என்றும், இவ்வாறு எதிரிகளை அழிக்கச் செல்லும் போது அதன் வேகம் ரன்ஸகதி என்று அழைக்கின்றனர்.

காண்க[தொகு]

சிவாயுதங்கள்

ஆதாரம்[தொகு]

  1. http://www.tamilvu.org/slet/l3763/l3763ine.jsp?x=9733&txt=%E4 ஐயன் ஐம் படைதாமும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்ராயுதம்&oldid=3180202" இருந்து மீள்விக்கப்பட்டது