சக்கராசனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சக்கராசனம்

சக்கராசனம் (Chakrasana) என்பது உடலை சக்கரம் போல் வளைத்துக் காட்டும் ஒரு ஆசனப்பயிற்சி நிலையாகும். இச்சொல்லின் பொருள் சமசுகிருத மொழியில் இருந்து வந்ததாகும். "சக்ரா" என்றால் சக்கரம் எனவும் ஆசனம் என்றால் நிலை என்றும் பொருளாகும். பார்ப்பதற்கு மேற்புறமாக நோக்கி அமைந்துள்ள வில்லை போன்று இந்நிலை தோன்றும். உடம்பை பின்புறமாக வளைத்து செய்யும் இந்த ஆசனம் அசுதாங்க வினையசா யோகாவை முடிக்கும் வரிசை நிலையாகும். இந்த ஆசனம் முதுகெலும்புக்கு பெரும் நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது. களரி, உடற்பயிற்சி விளையாட்டுப் பிரிவுகளில் இந்த உடல் அமைப்பு நிலை ஒரு பாலம் என்று அழைக்கப்படுகிறது.

தோற்றமும் பெயர்க்காரணமும்[தொகு]

உர்துவா தனுராசனா என்ற பெயர் ஒரு சமசுகிருத சொல்லாகும். உர்துவா என்றால் மேல்நோக்கி என்றும் தனுரா என்றால் வில் என்றும் பொருள் என்பதால் மேல் நோக்கிய வில் என்ற சொற்களாக இப்பெயர் பெறப்பட்டுள்ளது[1]. மேலும், சக்ராசனா என்ற பெயருக்கு சக்கரம் போன்று அமரும் நிலை என்றும் பொருள் கொள்ளப்படுகிறது[2][3]. இந்த நிலை 19 ஆம் நூற்றாண்டில் சிறீதத்வானிதியில் பரியங்காசன படுக்கை நிலை என விளக்கப்பட்டுள்ளது[4].

விளக்கம்[தொகு]

இந்த ஆசனத்தின் பொது வடிவத்தில் பயிற்சியாளர் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். கை, கால்கள் , மற்றும் அடிவயிறு போன்றவற்றை தரையிலிருந்து வானத்தை நோக்கி வளைக்க வேண்டும். மல்லாந்து பார்த்த நிலையில் மூச்சை இழுத்தபடி கால்களை மடக்கி பாதங்களை புட்டங்களின் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். இரு முழங்கைகளையும் மடித்து உள்ளங்கை காதுகளுக்கு அருகில் உள்நோக்கி தரையில் படுமாறு வைத்துக் கொள்ள வேண்டும். கைகளையும், கால்களையும் தரையில் நன்றாக ஊன்றி மூச்சை வெளியில் விட்டபடி உடலை மேலே தூக்க வேண்டும். பின்னர், இயல்பாக ஐந்து மூச்சுக்கள் விட்ட பிறகு மெதுவாக மீண்டும் முன்நிலைக்கு வரவும். நன்கு பயிற்சி பெற்றவர்கள் சக்கர முதுகை மலைபோல குவித்து அப்படியே நகர்வதும் உண்டு. சிலர் முதுகை மேல் நோக்கி வளைத்து கைகளை கால்களாக்கி நடப்பதும் உண்டு [5][6]

நன்மைகள்[தொகு]

முதுகு எலும்புகளைப் பலப்படுத்துவதுடன் புத்துணர்ச்சியை அளிக்கிறது. நீண்ட நேரம் மேசையில் அமர்ந்து கணினி பயன்படுத்துவோர்களுக்கு மன அழுத்தம், கோபம் மற்றும் கூன் முதுகு வராமல் தடுக்கும்.

மாறுபாடுகள்[தொகு]

ஏகா பாதா உர்துவா தனுராசனத்தின் ஒரு வகை

இந்த வகை யோகாசனம் பல்வேறு மாறுபட்ட நிலைகளைக் கொண்டுள்ளது. அவை:

 • ஏகா பாதா உர்துவ தனுராசனம்: வானத்தை நோக்கி ஒரு காலை நேராக உயர்த்தி வில்லைப் போல உடலை வளைக்கும் நிலை[7]
 • ஏகா அசுட்டா உர்துவா தனுராசனம்: தரையிலுள்ள ஒரு கையை எடுத்து உயர்த்தி தொடை அல்லது முட்டியில் வைத்துக் கொள்ளும் நிலை
 • கேமட்கராசனம்: ஒரு கையை உயர்த்தி அதற்கு எதிரான காலை நேராக்கும் நிலை[8][9]
 • சக்ரா பந்தாசனம்: முன் கையை தரையில் வைத்து கைகள் குதிகால்களை பற்றிக் கொள்ளும் நிலை.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Chakrasana". Ashtanga Yoga. மூல முகவரியிலிருந்து 2011-03-04 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011-04-11.
 2. Sinha, S. C. (1996). Dictionary of Philosophy. Anmol Publications. பக். 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7041-293-9. https://books.google.com/books?id=-zzRvh1fRzEC&pg=PA18. 
 3. Kaul, H. Kumar (1993). Yoga and drug addiction. B.R. Publishing Corporation. பக். 92. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7018-742-4. https://books.google.com/books?id=e_3aAAAAMAAJ. 
 4. Sjoman 1999, பக். 70.
 5. "Upward Bow (Wheel) Pose - Urdhva Dhanurasana - Yoga Pose". Yoga Journal. 2007-08-28. http://www.yogajournal.com/pose/upward-bow-or-wheel-pose/. 
 6. "Urdhva Dhanurasana: The Full Wheel Pose".
 7. "Eka Pada Chakrasana". Jaisiyaram. பார்த்த நாள் 21 March 2013.
 8. "Wild Thing". Yoga Journal (31 August 2009). பார்த்த நாள் 8 February 2019. "One poetic translation of Camatkarasana means "the ecstatic unfolding of the enraptured heart.""
 9. Iyengar 1979, பக். 379.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்கராசனம்&oldid=3174537" இருந்து மீள்விக்கப்பட்டது