சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயம்
சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயம், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், சக்கரக்கோட்டை கண்மாயில் அமைந்துள்ளது. 575 ஏக்கர் பரப்பளவில் அமைந்த சக்கரக்கோட்டை ஈர நில கண்மாயை 2024ஆம் ஆண்டில் ராம்சர் ஈர நிலமாக அறிவிக்கப்பட்டது.[1][2] குளிர்காலத்தில் சக்கரக்கோட்டை கண்மாயில் வெளிநாட்டுப் பறவையினங்கள் வலசை வந்து முட்டையிட்டு, பொறித்த குஞ்சு பறக்கப் பழகியவுடன் மீண்டும் தங்களது பிரதேசங்களுக்கு திரும்பச் செல்வது வழக்கம். இது பறவைகள் சரணாலயமாக மட்டுமின்றி, பல்லுயிர் இனப்பெருக்கம் நிறைந்த பாதுகாக்கப்பட்ட பகுதியாக வனத்துறை அறிவித்துள்ளது..சக்கரக்கோட்டை ஈர நிலம் இராமநாதபுரம் மாவட்டத்தின் ராம்சார் ஈர நிலங்களில் 5வது ஆகும். தமிழ்நாட்டின் ராம்சார் ஈர நிலங்களில் 18வது ஆகும்.
அமைவிடம்
[தொகு]சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயம், இராமநாதபுரத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தின் பிற ராம்சார் ஈர நிலங்கள்
[தொகு]- மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா
- தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம்
- கஞ்சிரான் குளம் பறவைகள் சரணாலயம்
- காரங்குடி சதுப்பு நிலம்
இந்தியாவில் ராம்சர் ஈர நிலங்கள்
[தொகு]இந்தியாவின் 85 ராம்சார் ஈர நிலங்கள் உள்ளது.[3]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]