சகேல் புதர் சிட்டுக்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சகேல் புதர் சிட்டுக்குருவி
Bush petronia (Gymnoris dentata dentata) male.jpg
Bush petronia (Gymnoris dentata dentata) female.jpg
Male (top image) and females in Senegal (below)
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: தொல்லுலகச்
சிட்டு
பேரினம்: சிம்னோரிசு
இனம்: G. dentata
இருசொற் பெயரீடு
Gymnoris dentata
(சுந்தேவால், 1850)
வேறு பெயர்கள்
  • பெட்ரோனியா தென்டாட்டா
  • சாந்தோதிரா தென்டாட்டா

சகேல் புதர் சிட்டுக்குருவி (Sahel bush sparrow)(ஜிம்னோரிசு தென்டாட்டா) அல்லது புதர் பெட்ரோனியாே , பசாரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவைச் சிற்றினம் ஆகும். இது ஆப்பிரிக்காவில் மொரிட்டானியா முதல் கினியா வரையிலும், கிழக்கே எரித்திரியா வரையிலும், தென்மேற்கு அரேபியத் தீபகற்பத்திலும் இதன் இயற்கையான வாழ்விடங்களான வறண்ட சவன்னா மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் புதர் நிலங்களில் காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

சகேல் புதர்க்குருவி ஒரு பெரிய, கூம்பு வடிவ அலகினையும் சிறிய வாலினையும் கொண்ட சிறிய பறவை ஆகும். இது சுமார் 13 cm (5 in) நீளம் வரை வளரும். ஆண் பறவை சாம்பல் நிற கொண்டையினைக் கொண்டுள்ளது. இது அகலமான ஆனால் ஒழுங்காக வரையறுக்கப்படாத சிவப்பு-பழுப்பு தலை முடி கொத்தினையும் சாம்பல்-பழுப்பு முகம் மற்றும் தொண்டையினையும், வெள்ளை கழுத்துப்பட்டையினையும் கொண்டுள்ளது. இனப்பெருக்க காலத்தில் ஆணின் அலகு கருப்பாக இருக்கும். ஆனால் ஆண்டின் பிற்பகுதியில் கொம்பு நிறத்தில் இருக்கும். மேல் பாகங்கள் மற்றும் வாலில் உள்ள இறகுகள் பழுப்பு நிறத்தில் காணப்படும். தொண்டையின் மேல் பகுதியில் மஞ்சள் நிறப் புள்ளி உள்ளது. மேலும் மார்பகம் நுரை-குஞ்சமும், வயிற்றில் இது வெண்மையாகவும் காணப்படும். பெண் பறவை ஆண் பறைவையினை போன்று காணப்படும். ஆனால் சாம்பல் நிற தலை முடி மற்றும் முகத்தை விட பழுப்பு நிறமானது. ஆண்டு முழுவதும் கொம்பு நிற அலகினையும் இரண்டு வெள்ளை இறக்கை பட்டைகளையும் கொண்டுள்ளன. இளம் பறவைகளில் வேறுபாடு இல்லை.

பரவலும் வாழிடமும்[தொகு]

செனகலிலிருந்து எரித்திரியா மற்றும் யேமன் வரை பரந்து விரிந்திருக்கும் ஆப்பிரிக்காவின் சகேல் பகுதி முழுவதும் பரந்த பகுதியிலான பொருத்தமான வாழ்விடத்தில் இந்த புதர்க்குருவி காணப்படுகிறது. இதன் வாழ்விடம் பொதுவாகப் பகுதி வறண்ட 1,700 m (5,600 ft) பகுதியாகும்.[2]

நிலை[தொகு]

இந்த சிற்றினம் மிகவும் பரந்த வரம்பைக் கொண்டுள்ளது. இதன் வாழிட வரம்பின் சில பகுதிகளில் பொதுவானதாக விவரிக்கப்படுகிறது. இதன் எண்ணிக்கை நிலையானது மற்றும் குறிப்பிட்ட அச்சுறுத்தல்கள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை. எனவே பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இதன் பாதுகாப்பு நிலையை "தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்" என்று மதிப்பிட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 BirdLife International (2016). "Gymnoris dentata". IUCN Red List of Threatened Species 2016: e.T22718303A94575191. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22718303A94575191.en. https://www.iucnredlist.org/species/22718303/94575191. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. Summers-Smith, D. (2019). "Sahel Bush-sparrow (Gymnoris dentata)". Handbook of the Birds of the World Alive. Lynx Edicions, Barcelona. 31 May 2019 அன்று பார்க்கப்பட்டது.