சகுரா, இந்தியா

ஆள்கூறுகள்: 34°09′32″N 74°49′54″E / 34.1589887°N 74.8316992°E / 34.1589887; 74.8316992
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சகுரா
Zakura
சுகுரா
ஆள்கூறுகள்: 34°09′32″N 74°49′54″E / 34.1589887°N 74.8316992°E / 34.1589887; 74.8316992
நாடு இந்தியா
யூனியன் பிரதேசம்சம்மு மற்றும் காசுமீர்
மாவட்டம்ஸ்ரீநகர்
தொகுதிஹசுரத்பால்
குடியேறியதுபண்டைய முறை
மொழிகள்
 • அதிகாரப்பூர்வ மொழிகள்காசுமீரி, தோக்ரி, உருது, இந்தி, ஆங்கிலம் [1]
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்190006
தொலைபேசி குறியீடு0194

சகுரா (Zakura), இந்திய நாட்டின் யூனியன் பிரதேசமான சம்மு மற்றும் காசுமீர் மாநிலத்தின் சிறீநகர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஓர் அறிவிக்கப்பட்ட பகுதியும் நகரமுமாகும். இந்த நகரம் அசுரத்பால் தொகுதியின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. காசுமீர் பள்ளத்தாக்கு வணிக மையத்திலிருந்து சுமார் 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கந்தர்பால் மாவட்டம் முனிசிபல் குழுவை சிறீநகர் உடன் இணைக்கும் குறைந்தபட்சம் இரண்டு முக்கிய சாலை இணைப்புகளை வழங்குகிறது.[2] சுக்குரா, சுக்குர் ஆகிய பெயர்களாலும் அறியப்படுகிறது.

நிலவியல்[தொகு]

இப்பகுதி 34°09′32″N 74°49′54″E / 34.1589887°N 74.8316992°E / 34.1589887; 74.8316992 வணிக மையமான சிறீநகரில் இருந்து வடக்கு நோக்கி 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.[3]

வரலாறு[தொகு]

20 ஆம் நூற்றாண்டில் இந்திய ஆயுதப் படைகளால் மனித உயிர்கள் கொல்லப்பட்டதை சகுராவில் வாழும் மக்கள் கண்டனர். அனைத்து கொடூரமான கொலைகளிலும் முக்கிய நிகழ்வு சகுரா படுகொலையாகும். 1990 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி சிறீநகரில் உள்ள ஜகுரா கிராசிங்கில் காசுமீரில் பொது வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை அமல்படுத்தக் கோரி போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதே இப்படுகொலைக்கான காரணம் ஆகும். இந்த சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்தனர்.[4]

மக்கள்தொகையியல்[தொகு]

சகுரா பகுதியின் அஞ்சல் குறியீடு 190006 ஆகும்.[5] காசுமீரி இப்பகுதியின் சொந்த மொழியாகும். மேலும் மக்கள் உருது மற்றும் ஆங்கிலம் சரளமாக பேசுகின்றனர்.

கல்வி[தொகு]

ஆசிய மருத்துவ அறிவியல் நிறுவனம்[தொகு]

இக்கல்லூரி இப்பகுதியின் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 2014 காசுமீர் வெள்ளம் ஏற்பட்ட போது தடுப்பூசி மற்றும் ஊசிகள் அளித்து கல்லூரி பெரும் பங்கையும் பங்களிப்பையும் அளித்தது. மருத்துவ உதவிப் பொருள்கள் வெள்ளத்தால் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டது இக்கல்லூரியிலேயே ஆகும். பல மனிதர்களின் உயிரைக் காப்பாற்ற கல்லூரி பெரிதும் உதவியது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Jammu and Kashmir Official Languages Act, 2020" (PDF). The Gazette of India. 27 September 2020. Archived from the original (PDF) on 19 October 2020. பார்க்கப்பட்ட நாள் 4 April 2022.
  2. "introduction about Zukura Srinagar". Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 5 January 2015.
  3. "indiamapia.com". பார்க்கப்பட்ட நாள் 5 January 2015.
  4. "Zakura, Tengpora carnages haunt survivors". Greater Kashmir (in அமெரிக்க ஆங்கிலம்). 13 March 2015. பார்க்கப்பட்ட நாள் 10 July 2020. https://www.greaterkashmir.com/news/more/news/zakura-tengpora-carnages-haunt-survivors/?amp
  5. "pincode.net". பார்க்கப்பட்ட நாள் 5 January 2015.
  6. "education in zukura". Archived from the original on 10 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 5 January 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகுரா,_இந்தியா&oldid=3929485" இலிருந்து மீள்விக்கப்பட்டது