உள்ளடக்கத்துக்குச் செல்

சகுந்தலா பாலியார்சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சகுந்தலா பாலியார்சிங்
Shakuntala Baliarsingh
பிறப்புபெப்ரவரி 18, 1948 (1948-02-18) (அகவை 78)
நரங்கர், கோர்தா மாவட்டம், ஒடிசா, இந்தியா
தொழில்எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்
கல்வி நிலையம்உத்கல் பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஒடியா சாகித்யரே இயாதியாபாடி சேதனா
குறிப்பிடத்தக்க விருதுகள்ஒடிசா சாகித்ய அகாதமி விருது (2009)
சாகித்ய அகாடெமி மொழிபெயர்ப்பு பரிசு (2015)
கையொப்பம்

சகுந்தலா பாலியார்சிங் (Shakuntala Baliarsingh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார். ஒடிய மொழியில் இவர் எழுதுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]
2017 ஆம் ஆண்டில் பாலியார்சிங்

பாலியார்சிங் 1948-ஆம் ஆண்டு இந்தியாவின் கோர்தா மாவட்டத்தில் உள்ள நரங்கர் என்ற இடத்தில் பிறந்தார். உத்கல் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார்.[1]

பாலியார்சிங் அங்க்யாடா பசரா இதிகதா, சுவயம்சிதா, பிபன்னா நபிகா, [2] ஒடியா சாகித்யரே இயாதியாபாடி சேதனா உள்ளிட்ட 30 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். ஒடியா சாகித்யரே இயாதியாபாடி சேதனா ஒரியா இலக்கியத்தில் இந்திய தேசியவாதம் மற்றும் உணர்வின் தாக்கத்தை ஆராய்கிறது. [3] செய்தித்தாள்களிலும் இவர் கட்டுரைகளை எழுதுகிறார்.[4]

2015 ஆம் ஆண்டில், திரிபுரசுந்தரி லட்சுமியின் கவேரி பாலி இயிதியே என்ற படைப்பை ஒடியா மொழியில் மொழிபெயர்த்ததற்காக பாலியர்சிங்கிற்கு சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருது வழங்கப்பட்டது. இது முதலில் தமிழில் எழுதப்பட்டது.[2][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dutt, Kartik Chandra (1999). Who's who of Indian Writers, 1999: A-M (in ஆங்கிலம்). Sahitya Akademi. p. 95. ISBN 978-81-260-0873-5.
  2. 1 2 "Odia writer Sakuntala Baliarsingh to get Sahitya Akademi award for translation". The Times of India. 2016-02-15. https://timesofindia.indiatimes.com/City/Bhubaneswar/Odia-writer-Sakuntala-Baliarsingh-to-get-Sahitya-Akademi-award-for-translation/articleshow/50999097.cms.
  3. Behera, Subhakanta (2002). Construction of an Identity Discourse: Oriya Literature and the Jagannath Cult (1866-1936) (in ஆங்கிலம்). Munshiram Manoharlal Publishers. pp. xvi. ISBN 978-81-215-1041-7. Archived from the original on 11 April 2025. Retrieved 27 January 2025.
  4. "For author, morning rituals govern the day". The Times of India. 2020-05-03. https://timesofindia.indiatimes.com/articleshow/75510903.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst.
  5. "Sahitya Akademi announces winners of translation prize". India Today (in ஆங்கிலம்). 2016-02-15. Archived from the original on 3 October 2019. Retrieved 2025-01-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகுந்தலா_பாலியார்சிங்&oldid=4558903" இலிருந்து மீள்விக்கப்பட்டது