உள்ளடக்கத்துக்குச் செல்

சகுந்தலா கரண்திகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சகுந்தலா பூபேந்திர கரண்திகர் (Shakuntala Bhupendra Karandikar 20 சூலை 1931-1 சூன் 2018) சகுந்தலா சந்திரசேகர் அகாசே எனவும் அறியப்படும் இவர் ஓர் இந்திய வாழ்க்கை வரலாற்றாசிரியர் மற்றும் பரோபகாரர் ஆவார். இவர் தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்றை மராத்திய மொழியில் விஸ்வஸ்தா (1992) எனும் பெயரில் எழுதியதற்காகவும், தகானுவில் பெண்களின் உரிமைகளுக்காக வாதிட்டதற்காகவும், பரோபகாரத்திற்காகவும் பரவலாக நினைவுகூரப்படுகிறார்.[a]

வாழ்க்கை வரலாறு

[தொகு]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம் 1931-1953

[தொகு]

கரண்திகர் 1931 சூலை 31 அன்று பம்பாய் மாகாணத்தின் புனே தொழிலதிபர் சந்திரசேகர் அகாசே மற்றும் மனைவி இந்திராபாய் அகாசே ஆகியோரின் பிரபுத்துவ மற்றும் தொழில்முனைவோர் சித்பவன் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.[1] இவரது தந்தை போர் மாநிலத்தில் உள்ள மங்கடாரி கிராமத்தின் 'கரானாவின்' உறுப்பினராக இருந்தார். இவரது தாயார் தார்வாட் பிரபுத்துவ கோகலே கரானாவைச் சேர்ந்தவர்.[3]

திருமணம், எழுத்துக்கள் மற்றும் பரோபகாரம் 1953-2018

[தொகு]

கரண்திகர் ஆரம்பத்தில் ஓவியம் பயின்றார். பள்ளிப்படிப்பைப் முடித்த பிறகு, 1953 ஆம் ஆண்டில் தகானுவின் கரானாவான பூபேந்திர "ராஜாபாவ்" கரண்டிகரை மணந்தார். தனது கணவரது வனவியல் மற்றும் உப்புப் படுகை வணிகங்களில் உதவிகரமாக இருந்தார். தகானுவில் இருந்தபோது, இவர் சமூகத்தின் முக்கிய உறுப்பினராக இருந்தார். பல்வேறு பெண்களின் நலன்களுக்கு ஆதரவாக பல்வேறு பெண்கள் அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு இவர் ஆதரவளித்தார். பன்னாட்டுச் சுழற் சங்கத்தின் தலைவராகவும், புதன்கிழமை மகளிர் வட்டமான தகானுவின் நிறுவனத் தலைவராகவும் பணியாற்றினார். சங்கங்களுக்கு நிதி திரட்டும் நடவடிக்கைகளை பலமுறை ஏற்பாடு செய்தார். இவர் தகானுவில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களுடனும் தொடர்புடையவராவார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 Ranade 1974, ப. 61, आगाशे, शकुंतला चंद्रशेखर.
  2. Barve, Vartak & Belvalkar 2002, अनुक्रमणिका [Index].
  3. Pathak 1978, ப. 976.
  4. "डहाणूतील थोर समाज सेविका शकुंतला करंदीकर यांचे निधन" (in mr). Rajtantra. 2 June 2018 இம் மூலத்தில் இருந்து 29 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200929050105/https://rajtantra.com/?p=4796.

 

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. ப.ச.ரோ.அ: Śakuntalā Bhūpendra Karandīkara née ப.ச.ரோ.அ: Śakuntalā Candraśekhara Āgāśe. Karandikar bore her father's name (Chandrashekhar) as a middle name before marriage as per the patronymic Marathi naming conventions,[1] but she is widely remembered by her married name, where her husband's name (Bhupendra) was her middle name.[2]
பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகுந்தலா_கரண்திகர்&oldid=4534335" இலிருந்து மீள்விக்கப்பட்டது