சகுந்தலா இரயில்வே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


சகுந்தலா இரயில்வே (Shakuntala Railway), இந்தியாவில் தனியார் துறையில் செயல்படும் ஒரே இரயில்வே நிறுவனம் ஆகும். இது இரண்டறை அடி குற்றகலப் பாதை கொண்ட இருப்புப்பாதை ஆகும். விதர்பா பகுதியில் விளையும் பருத்திப் பஞ்சை, பம்பாய் துறைமுகம் கொண்டு செல்வதற்காக சகுந்தலா இரயில்வே நிறுவனம் 1903ல் ஆங்கிலேயர்களால் துவக்கப்பட்டது. மத்திய இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் விதர்பா பகுதியின் யவத்மாள் தொடருந்து நிலையத்திலிருந்து, ஆச்சால்பூர் வழியாக பம்பாய்க்கு அருகில் உள்ள முர்தாஜாபூர் தொடருந்து நிலையம் வரை இயங்குகிறது. [1]

வரலாறு[தொகு]

பிரித்தானிய இந்தியாவில் கில்லிக், நிக்சன் கம்பெனியினரால் 1903ஆம் ஆண்டில் சகுந்தலா இரயில்வே 1903ஆம் ஆண்டில், இரண்டரை அடி (762 மிமீ) குற்றகலப் பாதை கொண்ட இருப்புப்பாதை 112 கி மீ தொலைவிற்கு நிறுவப்பட்டது.[2] விதர்பா பகுதியில் விளையும் பருத்தியை பம்பாய் துறைமுகம் அருகில் உள்ள முர்தாஜாபூர் தொடருந்து நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக சகுந்தலா இரயில்வே நிறுவப்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பின்னர் 1952ஆம் ஆண்டில், தனியார் துறையில் செயல்பட்டுக் கொண்டிருந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட இரயில்வே நிறுவனங்கள் அரசுடமையாக்கப்பட்டு இந்திய இரயில்வேயுடன் இணைக்கப்பட்ட போது [2][3]சகுந்தலா இரயில்வே நிறுவனம் தொடர்ந்து தனியார் துறையிடமே இருந்தது. 70 ஆண்டுகளாக நீராவி இயந்திரத்தால் ஓடிக்கொண்டிருந்த தொடருந்துகள், ஏப்ரல், 1994 முதல் டீசல் இயந்திரம் மூலம் இன்று பயணிகள் தொடருந்தாக இயங்குகிறது.[4][5]

தற்போது இந்திய இரயில்வே சகுந்தலா இரயில்வே நிறுவனத்தின் இருப்புப்பாதை பயன்படுத்திக் கொள்வதற்காக, சகுந்தலா இரயில்வே நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் ரூபாய் 1.2 கோடி உரிமைத் தொகையாக (Royalty) வழங்கி வருகிறது.

சகுந்தலா இரயில்வேயை அகலப் பாதையாக மாற்ற, இந்திய அரசு 2016ல் அறிவித்துள்ளது. [6]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகுந்தலா_இரயில்வே&oldid=2744469" இருந்து மீள்விக்கப்பட்டது